தீபாவளிக்கு பிறகு தமிழக அரசின் முக்கியமான 2 பிளான்.. சேகர்பாபு தகவல்!

Author: Hariharasudhan
22 October 2024, 3:36 pm

கிளாம்பாக்கத்தில் அடுத்த மாத இறுதிக்குள் மலிவு விலை உணவகம் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு: வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் 15.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காலநிலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், வண்டலூர் வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர் இந்த பூங்காவில், ஏராளமான தாவரங்கள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள், பார்க்கிங் வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

Kilambakkam

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏற்கனவே ஒரு காலநிலை பூங்கா உள்ள நிலையில், தற்போது இரண்டாவது பூங்கா அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “காலநிலை குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் பல்வேறு செடிகள், செயற்கை காடுகள், மழைநீர் தேக்கம், குளம், சிறுவர் பூங்கா போன்றவற்றுடன் அமைக்கப்படும். இப்பூங்காவை இன்னும் ஒரு மாதத்திற்குள் முதல்வர் துவக்கி வைப்பார்,

அன்றைய தினமே முடிச்சூரில் அனைத்து வசதிகளுடன் 150 பேருந்துகள் நிறுத்தக் கூடிய வகையிலான ஆம்னி பேருந்து நிலையத்தையும் முதலமைச்சர் துவக்கி வைப்பார்” என பேசினார்.

இதையும் படிங்க: இர்ஃபான் விவகாரத்தில் அரசியல் பின்புலம் தான்.. ஒப்புக்கொண்ட அமைச்சர் மா.சு!

அதேபோல், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுகாதாரம், குடிநீர், கழிவறைகள், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை அதிகப்படுத்த உள்ளதாகவும், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பது குறித்து கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருவதோடு, அதற்காக அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அடுத்த மாத இறுதிக்குள் மலிவு விலை உணவகம் மக்கள் பயண்பாட்டிற்கு வரும் என உறுதியளிப்பதாக அவர் கூறினார்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?