இமான் கிட்ட கேட்டா உண்மை தெரிஞ்சுடும்.. தர்மசங்கடத்தில் சிவகார்த்திகேயன்!!
Author: Udayachandran RadhaKrishnan22 October 2024, 8:32 pm
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உயர்வது மிகவும் கஷ்டமான விஷயம். எத்தனையோ முன்னணி நடிகர்கள் இருக்கும் போது அந்த இடத்தை அவ்வளவு சீக்கிரம் எளிதாக பிடிக்க முடியாது.
ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷை ஓவர் டேக் செய்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இவர் எதிர்வரும் படங்களில் தனுஷை விட சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
அதே சமயம், விஜய்க்கு அடுத்தது இவர்தான் என்பது போல பேச்சுக்களும் எழுகின்றன. அதற்கு காரணம் கோட் படத்தில் வந்த காட்சிதான்.
ஆனால் சிவகார்த்திகேயன் எந்த விமர்சனத்துக்கும் செவி சாய்க்காமல் மக்களை மகிழ்வித்து வருகிறார். இந்த நிலையில்தான் சிவகார்த்திகேயன் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.
அதில் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை, தம், மது எந்த பழக்கமும் இல்லாததால் தான் நான் இந்தளவுக்கு உயர காரணம் என கூறியிருக்கிறார்.
ஆனால் இது குறித்து ரசிகர்கள், யாருக்கு தெரியும், இமான் கிட்ட கேட்டா தெரிஞ்சிடப் போகுது என கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.
எந்த சர்ச்சையில் சிக்காத சிவகார்த்திகேயனுடைய திரை வாழ்க்கையில் இந்த விவகாரம் மட்டும் கருப்பு புள்ளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.