தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் திரை பின்பலம் எதுவுமே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனது திறமையாலும் கனவாலும் இன்று திரைத்துறையில் நட்சத்திர நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். முதன் முதலில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம் ஆனார்.
இவர் தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி காட்டியதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலில் 2012 ஆம் ஆண்டு மெரினா திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.
பின்னர் தனுஷ் உடன் 3 படம் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. தொடர்ந்து மனங்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன், காக்கிசட்டை, மான்கராத்தே, வேலைக்காரன், நம்ம வீட்டு பிள்ளை, மாவீரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து இன்று நட்சத்திர நடிகராக முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்:
தற்போது அவரது நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதில் அவர் நன்றாக வளர்ந்து அடையாளம் தெரியாத அளவுக்கு குட்டி ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறி இருப்பதாக ரசிகர்கள் வியப்புடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆராதனா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கனா படத்தில் படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடி பிரபலமானது குறிப்பிடத்தக்கது.