என்ன ***க்கு லவ் பண்றோம் : மீண்டும் சர்ச்சையில் சிக்கும் சிம்பு…!!
Author: Udayachandran RadhaKrishnan23 October 2024, 11:16 am
சிம்பு சர்ச்சைகளில் சிக்காத நாளே இல்லை என்பது போல முன்னொரு காலத்தில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இடையில் படங்களில் நடிக்காமல் இருந்த சிம்பு தற்போது தக் லைப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தவிர STR 48 படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்,.

இதையடுத்து STR 49 படத்தில் VINTAGE சிம்புவை பார்க்கலாம் என அவரே X தளத்தில் பதிவிட்டிருந்தார். இப்படி அடுத்தடுத்து அதிகமாக படங்களை கைவசம் வைத்துள்ள சிம்பு பழைய கூட்டணியுடன் இணைகிறார்.
மேலும் படிக்க: STR 48: தீபிகா படுகோன் இல்லையாம்.. சிம்புவுக்கு ஜோடியாகும் நடிகை இவரா?.. லேட்டஸ்ட் Update..!

அதாவது, சிம்புவின் படங்களை தூக்கி விட காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் யுவன்தான். பின்னர் ஏ.ஆர் ரகுமான் தான்.. இப்படி இருக்கையில் சிம்பு மீண்டும் அனிருத்துடன் இணைய உள்ளார்.
மேலும் படிக்க: STR 48 ல் சிம்பு வில்லன் ஆ.. அப்போ Hero?.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
என்ன ****க்கு லவ் பண்றோம் என பாட்டு பாடி, பெண்கள், ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான சிம்பு – அனிருத் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.

அஸ்வர்த மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகிறது. VINTAGE சிம்புவை பார்க்கலாம் என கூறியுள்ள நிலையில், அவருக்கு சூப்பர் டூப்பர் பாடலை கொடுத்த யுவனை கழட்டி விட்டு அனிருத் இணைகிறார். BEEP பாடலை போல இல்லாமல் இருந்தால் சரி என ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.