திடீரென முட்டித் தூக்கிய மாடு.. தூக்கி வீசப்பட்ட மாணவி.. நெல்லையில் அதிர்ச்சி!
Author: Hariharasudhan23 October 2024, 1:26 pm
நெல்லையில் சாலையில் ஸ்கூட்டியில் சென்ற மாணவியை மாடு முட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி: நெல்லையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி, தனது இருசக்கர வாகனத்தில் (ஸ்கூட்டி) கல்லூரிக்குச் சென்றுள்ளார். அப்போது, நெல்லை தியாகராய நகர் அருகே மாடு ஒன்று திடீரென மாணவியின் இருசக்கர வாகனத்தில் மோதி உள்ளது.
இதனையடுத்து, அம்மாணவி கண்ணிமைக்கும் நேரத்தில் சற்று தொலைவில் தூக்கி வீசப்பட்டார். இந்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நெல்லை மாநகரப் பகுதிகளில் மாடுகளைக் கட்டுப்படுத்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. அதிலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவரை மாடு முட்டியதில் பேருந்துக்குள் அந்த நபர் சிக்கி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: பதறியடித்து ஓடோடி வந்த மாஜி அமைச்சர் மகன்.. வீட்டுக்கு முன் பரபரப்பு!
அது மட்டுமல்லாமல், திருநெல்வேலி மாநகரத்தின் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதி அடைந்து வருவதாகவும், மாநகராட்சியின் எச்சரிக்கையை மாட்டு உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.