ஆச்சரியமா இருக்கே… உடல் எடையை குறைப்பதற்கு கூட பேரிச்சம் பழத்தை பயன்படுத்தலாமா…???

Author: Hemalatha Ramkumar
23 அக்டோபர் 2024, 5:31 மணி
Quick Share

நம்முடைய ஆரோக்கியத்திற்கு பல்வேறு நலன்களை தரும் ஊட்டச்சத்து நிறைந்த பேரிச்சம்பழம் ஒரு சிறந்த சூப்பர் ஃபுட்டாக கருதப்படுகிறது. இயற்கையான இனிப்பு சுவை கொண்ட இது நார்ச்சத்து பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்களை கொண்டிருக்கிறது. இதனை சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். ஆரோக்கியமான செரிமானம், ஆற்றலை அதிகரிப்பது மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்குவதற்கு கூட பேரிச்சம்பழம் உதவுகிறது. வைட்டமின்கள் A மற்றும் K, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பேரிச்சம்பழமானது நம்முடைய எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது. 

பேரிச்சம் பழத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பதால் இது வீக்கத்தை குறைத்து, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. இத்தனை பலன்கள் போதாது என்று இந்த பேரிச்சம் பழம் நம்முடைய உடல் எடையை பராமரிப்பதற்கும் உதவுகிறது ஒருவேளை உங்களுடைய உடல் எடையை இயற்கையான முறையில் குறைப்பதற்கான வழியை நீங்கள் தேடி கொண்டு இருந்தால் உங்களுக்கான சில எளிய வழிகளை இப்போது பார்க்கலாம். 

ஒர்க் அவுட்டுக்கு முந்தைய ஸ்னாக்ஸ் 

உடல் எடையை குறைப்பதற்கு வொர்க்-அவுட் செய்வதற்கு முன்பு நீங்கள் பேரிச்சம் பழத்தை ஒரு ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். இயற்கை சர்க்கரைகள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பேரிச்சம் பழமானது உங்களுக்கு போதுமான ஆற்றலை அளித்து, சோர்வு ஏற்படுவதை தாமதப்படுத்தி, தசை விரைவில் குணமடைவதற்கு உதவுகிறது. இதற்கு நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு 2 முதல் 3 பேரிச்சம் பழங்களை தண்ணீர் அல்லது பாதாம் பாலுடன் சாப்பிடலாம். 

இயற்கை இனிப்பான் 

உடல் எடையை குறைப்பதற்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இந்த பேரிச்சம் பழங்களை நீங்கள் தாராளமாக சாப்பிடலாம். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக பேக்கிங், ஸ்மூத்தி மற்றும் இனிப்பு வகைகளில் நீங்கள் பேரிச்சம் பழங்களை பயன்படுத்தலாம். நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பதால் பேரிச்சம் பழங்கள் உங்களுக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வை கட்டுப்படுத்தி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. 

எனர்ஜி பால்ஸ் 

நட்ஸ் (பாதாம் பருப்பு, வால்நட்) விதைகள் (சியா, ஆளி விதைகள்) மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் (தேங்காய் எண்ணெய், பீனட் பட்டர்) ஆகியவற்றை ஒன்றும் பாதியுமாக அரைத்து பேரிச்சம் பழத்தோடு சேர்த்து உருண்டையாக பிடித்து எனர்ஜி பால்ஸ்களை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்யலாம். இது உங்களுடைய மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிக ஆற்றலை வழங்குகிறது. 

பேரீச்சம் பழம் மற்றும் பால்

இரவு தூங்குவதற்கு ஒரு அற்புதமான காம்பினேஷனாக இது அமைகிறது. இது நம்முடைய செரிமானத்தை தூண்டி, ஓய்வை அளிக்கிறது. பேரிச்சம் பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரைகள் பாலில் உள்ள கால்சியத்தை சமநிலைப்படுத்தி கால்சியம் உறிஞ்சப்படுவதை எளிமையாக்குகிறது. மேலும் செரிமான அமைப்பை அமைதிப்படுத்துகிறது. இதற்கு நீங்கள் தூங்க செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு 2 முதல் 3 பேரிச்சம் பழங்களை வெதுவெதுப்பான பாலில் சேர்த்து சாப்பிடலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • விஜய் சொன்னது சரிதான்.. ஜெயக்குமார் போடும் கணக்கு!
  • Views: - 99

    0

    0

    மறுமொழி இடவும்