சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 440 ரூபாய் குறைந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சர்வதேச அளவில், மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றம், உலகின் ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளின் நாணயக் கொள்கைகள் மற்றும் அமெரிக்க தேர்தல் ஆகியவை காரணமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், இன்று அதிரடியாக தங்கம் விலை சரிவைக் கண்டுள்ளது.
அதன்படி, இன்று (அக்.24) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 55 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 285 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : விஜய் சேதுபதி வேஸ்ட்…. கமல் தான் பெஸ்ட் – வன்மத்தை கக்கிய ரவீந்தர்!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 740 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 61 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி ஒரு கிராம் 2 ரூபாய் குறைந்து 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.