கேன்சர் வரக்கூடாதுன்னா இன்னையோட இதெல்லாம் சாப்பிடுவத விட்டுருங்க!!!

Author: Hemalatha Ramkumar
24 October 2024, 3:36 pm

முன்பெல்லாம் கேன்சர் பற்றி கேட்பது அரிதாக இருக்கும். ஆனால் தற்போது கேன்சர் அதிக அளவில் மக்களை பாதித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம்தான். மேலும் வழக்கமான செக்கப்புகள் செய்வதை அலட்சியப்படுத்துவது நோய் கண்டறிதல் தாமதமாக்கி அதற்கான சிகிச்சை வழங்குவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இது தவிர ஒரு சில மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணங்களாக அமைகிறது. இன்றைய இளைஞர்கள் அதிக அளவு கொழுப்பு, குறைந்த நார்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் அவர்களுடைய உடலில் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுவதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போகிறது. இதனால் நுரையீரல், ப்ராஸ்டேட் மற்றும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட புற்றுநோய் ஏற்படுவது அதிகமாகின்றது. எனவே புற்றுநோய் வராமல் இருக்க நாம் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். 

மதுபானம் 

அசிடால்டிஹைடு கொண்டு தயாரிக்கப்படும் மதுபானம் அதிக நச்சு நிறைந்தது. இது நிரந்தர DNA சேதத்தை ஏற்படுத்தலாம். இதனால் புற்றுநோய் உருவாக வாய்ப்பு உள்ளது. நமது கல்லீரல் மதுபானங்களில் உள்ள எத்தனாலை அசிட்டால்டிஹைடாக மாற்றுகிறது. மேலும் சிறிய அளவு எத்தனால் கூட நம்முடைய வாய் மற்றும் வயிற்றில் உடைக்கப்படுகிறது. DNA சேதம் தவிர இதன் காரணமாக ரத்தத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவுகள் அதிகரிப்பதால் மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் 

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அவை கட்டு கட்டாக ஆபத்தையும் கொண்டு வருகின்றன. இவற்றில் உள்ள கெமிக்கல்கள் செல்களை சேதப்படுத்தி புற்றுநோயை வரவழைக்கிறது. பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நைட்ரேட் மற்றும் நைட்ரைட்டுகள் உள்ளன. இது நமக்கு புற்றுநோயை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியை கார்சினோஜன் என்று உலக சுகாதார மையம் பெயரிட்டுள்ளது. கார்சினோஜன் என்பது புற்றுநோய் ஏற்படுத்தும் செல்கள். 

இதையும் படிக்கலாமே: மகராசனம்: நாள்பட்ட முதுகு வலி மன அழுத்தத்திற்கு தீர்வு… இன்னும் நிறையவே இருக்கு!!!

சோடா 

ஒரு பாட்டில் சோடாவில் கிட்டத்தட்ட 1000 தேவையற்ற கிலோ ஜூல்கள் உள்ளது. சோடா நம்முடைய உடலுக்கு மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும். இதில் உள்ள சர்க்கரை நேரடியாக புற்றுநோயை ஏற்படுத்தா விட்டாலும் இந்த கூடுதல் கிலோ ஜூல்கள் நமக்கு உடற்பருமனையும், அதிக உடல் எடையை பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய் மற்றும் பிற வகை புற்றுநோய்கள் ஏற்படலாம். நமது உடலில் அதிகப்படியான கொழுப்பு திசுக்கள் இருப்பதால் 13 வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகிறது. 

வெள்ளை நிற தானியங்கள்

சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் பல வகையான புற்றுநோயுடன் தொடர்பு கொண்டு உள்ளன. எனவே முடிந்த அளவு வெள்ளை நிற தானியங்களை தவிர்க்கவும். அதற்கு பதிலாக முழு தானியங்களை சாப்பிடுங்கள். முழு தானியங்கள் நமக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கோலான் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை தவிர்க்கிறது. இது நமக்கு போதுமான அளவு நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. இதுவே பிரட் போன்ற வெள்ளை தானியங்களில் நார்ச்சத்து சுத்தமாக இருப்பதில்லை. 

தாவர அடிப்படையிலான பால் 

எப்பொழுதுமே முழு கொழுப்பு கொண்ட பாலை தேர்ந்தெடுப்பது நல்லது. தாவரம் சார்ந்த பாலில் புரோட்டின் மிகக் குறைவாக இருக்கும். மேலும் பசும்பாலில் இருக்கும் கால்சியம் நமக்கு கோலோரெக்டல் கேன்சர் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும். தாவர அடிப்படையிலான பாலை இதற்காக நாம் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அந்த பாலை பருகும் அதே சமயத்தில் நம்முடைய ஊட்டச்சத்தை சமநிலையாக்க பிற உணவுகளையும் சேர்த்து சாப்பிடுவது அவசியம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Lokesh Kanagaraj Kaithi 2 Updates சொர்க்கவாசல் படத்தால் கைதி 2 – க்கு சிக்கல்..குழப்பத்தில் லோகேஷ் ..!
  • Views: - 178

    0

    0