சிம்லாவில் சொந்த வீடு.. என்னை விட கம்மிதான் .. சொல்லாமல் சொன்ன ராகுல்

Author: Hariharasudhan
24 October 2024, 6:14 pm

வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

வயநாடு: வருகிற நவம்பர் 13ஆம் தேதி, கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் இருந்து வயநாடு தொகுதி வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோக்கேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று (அக்.23) பிரியங்கா காந்தி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதனையடுத்து, இன்று (அக்.24) வயநாடு மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், பிரியங்கா காந்தியின் சொத்து விவரம், அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் படி தெரிய வந்துள்ளது. இது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தில் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி, பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வத்ராவிடம் மொத்தம் சுமார் 78 கோடி ரூபாய் சொத்து உள்ளது.

இதில் 12 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் தனது பெயரில் இருப்பதாக பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். இவற்றில் பொருட்களை தன்னிடம் இருப்பதாகப் பகிர்ந்து கொண்டார். அதேநேரம், இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் சுமார் 5.63 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வீடு தனக்குச் சொந்தமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் தர்பார் பட பாணியில் கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் கைது

அதேநேரம், கணவர் ராபர்ட் வதேராவிடம் 37.9 கோடி ரூபாய்க்கு மேல் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.27.64 கோடிக்கு வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் தனது பிரமாணப் பத்திரத்தில் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரியங்கா காந்தி வத்ரா மொத்தமாக 2023 – 2024 ஆம் நிதி ஆண்டில் 46.39 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.

வாடகை, வங்கிகள் மற்றும் பிற இடங்களில் இருந்து வரும் வட்டி மூலம் இந்த வருமானம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது கணவர் ராபர்ட் கொடுத்த கார், பல்வேறு வங்கிக் கணக்குகளில் சேமித்து வைத்த பணம் 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள 4,400 கிராம் தங்கம் ஆகியவை உள்ளன.

முன்னதாக, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த பிறகு பேசிய ராகுல் காந்தி, தன்னை விட சிறப்பாக பிரியங்கா காந்தியால் வயநாட்டிற்குச் செய்ய முடியாது என ராகுல் காந்தி பேசினார். மேலும், வயநாடு தனது வீடு போன்றது என்றும், எப்போது வேண்டுமானாலும் வந்து செல்வேன் எனவும் அவர் கூறினார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 151

    0

    0