தமிழ்த்தாய் வாழ்த்து : “Technical Fault” என முட்டுக்கொடுப்பது ஏன்? வானதி சீனிவாசன் அதிரடி!

Author: Udayachandran RadhaKrishnan
25 அக்டோபர் 2024, 4:46 மணி
Udhayanidhi
Quick Share

சென்னையில் இன்று நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு முறை பாடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள் பிழையாக பாடியதால் மீண்டும் சரியாக பாடப்பட்டது.

இது குறித்து விளக்கம் அளித்த உதயநிதி, தவறாக பாடவில்லை, இது டெக்னிக்கல் Fault. மைக் சரியாக வேலை செய்யவில்லை என கூறினார்.

இதற்கு கண்டனம் எழுகின்றன. ஏனென்றால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய வீடியோ வைரலான நிலையில், அதில் பாடியவர்கள் புகழ்மணக்க என்பதற்கு பதிலாக திகழ்மணக்க என பாடியுள்ளனர். இதனால் உதயநிதிக்கு இது கூட தெரியாதா? எதற்கு டெக்னிக்கல் Fault என்று சொல்ல வேண்டும் என கண்டனக்குரல் எழுந்து வருகின்றன.

அந்த வகையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், உதயநிதியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீங்கள் துணை முதல்வரா அல்லது தமிழின எதிர்ப்பாளரா திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களே ?

1.நீங்கள் பங்கேற்கும் விழாவில் நமது தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக பாடுவதைக் கூட உறுதிசெய்ய தவறிய உங்களுக்கு துணை முதல்வராக நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது?

2.இதுதான் நீங்கள் தமிழ் மொழியைக் கட்டிக் காக்கும் லட்சணமா?

3.தவறாகப் பாடுவது காணொளியில் தெளிவாக தெரியும் போது, செய்த தவறை மறைக்க “Technical Fault” என்று புது விதமாக முட்டுக் கொடுப்பது ஏன்?

4.ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுவிட்டது என கூறி தமிழக ஆளுநரின் மீது இனவெறி சாயத்தைப் பூசிய உங்கள் தகப்பனார், உங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?

5.தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாகப் பாடியதாக பொய்ப் புகார் கூறி ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று மத்திய அரசிடம் மல்லுக்கட்டினீர்களே, நீங்கள் பங்கேற்ற விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுள்ளதே, உங்கள் பதவி பறிக்கப்படுமா? என பதிவிட்டுள்ளார்.

  • 10th SSLC Exam 10ஆம் வகுப்பில் 20 மார்க் எடுத்தால் பாஸ்.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
  • Views: - 35

    0

    0

    மறுமொழி இடவும்