ஆர்மியில் இருப்பவர் தாடி வைத்திருப்பாரா? சர்ச்சையில் சிக்கிய “அமரன்” – சிவகார்த்திகேயன் பதில்!

Author:
26 October 2024, 7:48 am

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார்.

Amaran Trailer

இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் ரிலீஸ் இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் அமரன் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக சிவகார்த்திகேயன் பிக் பாஸில் திடீர் விசிட் கொடுத்தார். அங்கிருக்கும் போட்டியாளர்களிடம் பல விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்த அவர் அப்போது அமரன் படத்தை பற்றியும் சிவகார்த்திகேயன் பேசியிருந்தார் .

அதாவது, ஆர்மியில் இருப்பவர்கள் தாடி வைத்திருப்பார்களா? சிவகார்த்திகேயன் இப்படி ஒரு லூக்கில் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பதை பலரும் விமர்சனம் செய்தார்கள். அதற்கு பிக் பாஸில் சிவகார்த்திகேயன் தெளிவான பதில் கொடுத்திருக்கிறார் .

இதையும் படியுங்கள்: இணையத்தில் தீயாய் பரவும் சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்!

அதாவது 44 ராஷ்ட்ரியா ரைபிள்ஸ் என்ற ஒரு ஸ்பெஷல் டீம் இருக்கும். அவங்களுக்கு தாடி பற்றி எல்லா கட்டுப்பாடு எதுவுமே கிடையாது. அவங்க மக்களோடு மக்களாகவும் சில நேரங்கள் இருப்பாங்க. அதனால் தான் நான் அப்படி நடிக்க வேண்டியதாக இருந்தது என சிவகார்த்திகேயன் தெளிவான பதிலை கூறி சர்ச்சைக்கு முடிவு கட்டி இருக்கிறார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?