ஹீமோகுளோபின் அதிகமா இருக்குறதும் பிரச்சினை தான்… ஏன்னு தெரிஞ்சுக்குவோமா…!!!

Author: Hemalatha Ramkumar
26 October 2024, 10:26 am

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அளவுக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது மிக குறைவாக இருந்தாலோ நம்முடைய உடலுக்கு அது பிரச்சனை தான். எனவே குறைவான ஹீமோகுளோபின் அளவுகளைப் போலவே ஹீமோகுளோபின் அளவுக்கு அதிகமாக இருப்பதும் ஆபத்தை உருவாக்கும். ஆகவே தொடர்ச்சியாக ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருந்தால் என்னென்ன மாதிரியான பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். 

ஹீமோகுளோபின் என்பது உடல் முழுவதும் ஆக்சிஜனை சுமந்து செல்லும் சிவப்பு ரத்த அணுக்களில் காணப்படும் ஒரு புரோட்டீன். ஆண்களில் இது 16.6 g/dL மற்றும் பெண்களில் 15 g/dL ஆக இருக்க வேண்டும். இந்த அளவைவிட அதிகமாக இருந்தால் நம்முடைய ரத்தம் அதிக தடிமனாக இருக்கும். மேலும் அதன் பாயும் திறன் குறையும். இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம். 

ஹீமோகுளோபின் அதிகமாக இருப்பதற்கு ஒரு சில பொதுவான காரணங்கள் உள்ளன. அதிக உயரங்களில் வாழ்வது, தொடர்ச்சியாக புகைபிடித்தல், நீரிழப்பு அல்லது கிரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மோனரி டிசீஸ் போன்ற பிரச்சினைகள் காரணமாக அதிகரிக்கலாம். இன்னும் மோசமான சூழ்நிலைகளில் இது நமது உடலில் அதிக அளவு சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் பாலிசைதீமியா வேரா என்ற அரிய வகை ரத்த நோயின் காரணமாகவும் ஏற்படலாம். 

இதையும் படிக்கலாமே: மூன்றே பொருட்களை வைத்து ஹெல்தியான இன்ஸ்டன்ட் அல்வா!!!

அதுமட்டுமல்லாமல் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நம்முடைய உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். இதனால் ரத்தத்தின் பருமன் குறையும். இது இறுதியில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இதய நோய், நுரையீரல் நோய்கள் மற்றும் ஒரு சில ரத்த கோளாறுகளில் காரணமாகவும் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கலாம். 

இப்போது ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்:- 

ரத்த கட்டுகள் 

ரத்தம் தடிமனாக இருந்தால் அதனால் ரத்தக்கட்டுகள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால் ஹார்ட் அட்டாக், பக்கவாதம் அல்லது நரம்பு த்ராம்போசிஸ் ஏற்படலாம்.

உயர் ரத்த அழுத்தம் 

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகமாக இருந்தால் நம்முடைய ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

சோர்வு மற்றும் மயக்கம்

ஆக்ஸிஜன் சுமந்து செல்லும் திறன் அதிகமாக இருந்தாலும் கூட மோசமான இரத்த ஓட்டத்தின் காரணமாக சோர்வு மற்றும் மயக்கம்  ஏற்படும். 

சிகிச்சை 

ஹீமோகுளோபின் அளவு அதிகமாக ஆனதற்கு பின்னணியில் உள்ள காரணத்தை கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம். 

தடுப்பதற்கான குறிப்புகள் ஹீமோகுளோபின் அளவுகளை சீராக பராமரிப்பதற்கு தேவையான வாழ்க்கை முறை மாற்றங்களை செம்ய வேண்டும். சரிவிகித உணவை சாப்பிடுவது, தினமும் குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது, ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பது மற்றும் மதுபானங்கள & புகை பிடிப்பதை தவிர்ப்பது போன்ற மாற்றங்கள் இதில் அடங்கும்.

  • Ajith racing and movies நடிப்பிற்கு bye bye …அஜித் எடுத்த திடீர் முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
  • Views: - 72

    0

    0