அஜித்தின் அலுவலத்தில் வேலை பார்த்த நான் இன்று அவருக்கே வில்லன் – பிரபல நடிகர் பெருமிதம்!

Author:
26 October 2024, 10:36 am

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகரும் டாப் அந்தஸ்தில் இருந்து வருபவருமான நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது .

இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் தொடக்கத்தில் இந்த படம் வெளிவர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க திரிஷா நடிக்கிறார் .

good bad ugly

மேலும், என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகு இந்த திரைப்படத்தில் திரிஷா ஜோடியாக சேர்ந்து அஜித்துடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் பிரசன்னாவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகரான அர்ஜுன் தாஸ் அஜத்துடன் நடித்திருப்பது குறித்து நெகிழ்ச்சியாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அந்த பதிவுதான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நான் சினிமா வாய்ப்பு தேடிச் சென்னைக்கு வந்த புதிதில் அஜித்தோட மேனேஜர் ஆன சுரேஷ் சந்திராவோட டீம்ல தான் வேலை கிடைத்தது. அதன் மூலமா பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சந்திக்க வேண்டிய வாய்ப்பு எனக்கு தேடி வந்துச்சு.

அஜித் சார் கூட நான் ரொம்பவும் நெருக்கமான வேலை செஞ்சிருக்கேன். அவருடைய சூட்டிங் செட்டுக்கு போறது மார்க்கெட்டிங் செல்வது இப்படி பல வேலைகளை அவரோட படத்துக்காக செய்துள்ளேன். அப்படித்தான் வீரம் படத்தோட டீசர் நான் தான் அப்லோட் பண்ணுனேன். அதன் பின்னர் மாஸ்டர் படம் பார்த்துவிட்டு அஜித் சார் எனக்கு போன் செய்து நாம் இருவரும் விரைவில் சேர்ந்து பணியாற்றலாம் அப்படின்னு என்கிட்ட சொன்னாரு .

arjun dass

ஆனால், அது இப்ப நிஜமாகிடுச்சு. ஆம் நான் இப்போது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அவருடன் நடித்திருக்கிறேன். மேலும் அந்த பதிவில் அஜித் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பாளர் உள்ளிட்ட எல்லோருக்கும் நன்றி என கூறி அர்ஜுன் தாஸ் பதிவிட்டு இருக்கிறார்.

இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக அர்ஜுன் அஜித்துக்கு வில்லன் ரோலில் தான் நடிக்கிறார் என திட்டவட்டமாக கூறி வருகிறார்கள். அஜித்துடன் அர்ஜுன் தாஸ் மோத போகும் அந்த காட்சிகளை திரையில் பார்த்த ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!