மெக்கானிக் கோளாறு.. அது விஜய் பிரச்னை.. ரகுபதியின் பதில்!

Author: Hariharasudhan
26 October 2024, 5:35 pm

உதயநிதி ஸ்டாலின் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையானது மெக்கானிக் கோளாறு என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டையில் இன்று (அக்.26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்த்தாய் வாழ்த்து எங்களை விட வேறு யாரும் மதிக்க முடியாது. எங்களைப் பொறுத்தவரையில், தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல் எந்த அரசு நிகழ்ச்சியையும் தொடங்குவதில்லை.

இந்த விவகாரத்தில் ஆளுநர் தான் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். அவர் சர்ச்சை ஆக்காமல் இருந்திருந்தால், இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டு இருக்காது. நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்வில், மைக் பிரச்னையால் ஏற்பட்ட கோளாறு, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் கோளாறுகளை நம் தவிர்க்க முடியாது. அதுபோன்ற தடைகளை ஏற்றுக் கொள்ளலாம்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வழக்கு போட்டு, அவரை பழிவாங்க வேண்டியதில்லை. ஏனென்றால், அவரை ஏற்கனவே அவரது கட்சிக்காரர்கள் பழி வாங்கி வருகின்றனர்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று ஒற்றை ஆளாக போராட்டம் நடத்தியுள்ளார். அவருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். வேலு நாச்சியாரையும், பெரியாரையும், அண்ணாவையும் யார் ஏற்றுக்கொண்டாலும் திராவிடம் இல்லாமல் இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது.

அண்ணா படத்தை நடிகர் விஜய் வைப்பதும், வைக்காததும் அவருடைய விருப்பம். ஆனால், தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டியவர் அண்ணா. அதனை யாரும் மறுக்க முடியாது. தமிழக மக்களின் இதயத்தில் குடி கொண்டிருப்பவர் அண்ணா. விஜய் கட் அவுட் வைக்கவில்லை என்றாலும், அண்ணாவின் புகழை யாரும் மறக்க முடியாது.

இதையும் படிங்க: தம்பியால் அண்ணனை விளாசும் நெட்டிசன்கள்.. தவெக மாநாட்டில் அஜித்!

எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை. எங்களது கூட்டணி கான்கிரீட் போன்று வலிமையாக உள்ளது. எதை வைத்த உடைத்தாலும் உடைக்க முடியாது. யாரும் கவலைப்பட வேண்டாம், 2026-ல் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

புழல் சிறையில் 2,000 கைதிகள் தான் இருக்கலாம். ஆனால், காலச் சூழலில் தற்போது 3 ஆயிரம் கைதிகள் உள்ளனர். தற்போது தமிழக முதலமைச்சர் புழல் சிறையில் ஆயிரம் சிறைக்கைதிகள் தங்கக்கூடிய கூடுதல் சிறைக் கட்டிடத்தை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும். எதிர்காலத்தில் புழல் சிறையில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற பிரச்னை வராது” எனத் தெரிவித்தார்.

  • netizens criticize youtuber irfan for his behavior in giving gifts on ramadan மாட்டிக்கினாரு ஒருத்தரு… தானமளித்து வீடியோ போட்ட இர்ஃபானை பந்தாடும் இணையவாசிகள்…