தவெகவில் இதற்கெல்லாம் தடை.. மாநாட்டில் மாறும் வழித்தடங்கள்!

Author: Hariharasudhan
26 அக்டோபர் 2024, 7:36 மணி
TVK
Quick Share

தவெக மாநாட்டில் மது அருந்தும் கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம்: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற இன்னும் சரியாக 24 மணி நேரம் கூட இல்லை. இதனால் மாநாட்டுத் திடல் மின்விளக்குகளால் ஜொலித்து வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து கூட விஜய் ரசிகர்கள், தொண்டர்களாக வந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கான சிற்றுண்டி வழங்கும் பை ஒருபுறம் தயாராகிக் கொண்டிருக்க, மறுபுறம் மாநாட்டு பாதுகாப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சில முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

இதன்படி, திருச்சி செல்லும் அரசுப் பேருந்துகள் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள், திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  

TVK

அதேபோல், சென்னையில் இருந்து திருச்சி செல்லும் கார்கள் திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லும் வகையிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து மற்றும் கார்கள் செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை வரும் வகையிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

திருச்சியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் வில்லியனூர் மற்றும் திண்டிவனம் வழியாக சென்னை வரும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்துக்காக மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நாளைய மாநாட்டிற்கு உள்ளே சில பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: பாமகவுக்கு தாவிய தவெக நிர்வாகிகள்.. நாளை மாநாடு நடக்கும் நிலையில் விஜய்க்கு ஷாக்!

செல்ஃபி ஸ்டிக், மதுபானங்கள், வீடியோ கேமராக்கள், ஃபிளாஷ் லைட் உள்ள கேமராக்கள், ட்ரோன் போன்ற ரிமோட் உபகரணங்கள், ஸ்கேட்டிங் ஸ்கூட்டர், சைக்கிள்-பைக் உட்பட இருசக்கர வாகனங்கள், பிளே கார்ட்ஸ், மது அருந்த பயன்படுத்தப்படும் கண்ணாடி டம்ளர்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கோப்பைகள், விலங்குகள், சட்டவிரோத பொருட்கள், ரேடியோ தொடர்பு சாதனங்கள், ஆபத்தான பொருட்கள், லேசர் பொருட்கள், ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள், மற்ற கட்சிகளின் கொடிகள் பேனர்கள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • mad 30 ஆண்டுகளுக்கு பின் தத்தளித்த தூங்கா நகரம் : தூங்கியது யார்?
  • Views: - 43

    0

    0

    மறுமொழி இடவும்