தீபாவளி ஸ்பெஷல்: கிரிஸ்பியா, டேஸ்டா சோமாஸ் செய்யறது நீங்க நினைக்குற மாதிரி அவ்வளவு கஷ்டமெல்லாம் இல்லைங்க…!!! 

Author: Hemalatha Ramkumar
26 October 2024, 7:45 pm

பொதுவாக தீபாவளி பலகாரங்களில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது இனிப்பு சோமாஸ் தான். சோமாசை வித விதமான பூரணம் வைத்து செய்யலாம். இந்த பதிவில் கொங்குநாடு ஸ்டைலில் இனிப்பு சோமாஸ் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

மைதா மாவு 

ரவை 

நெய் 

தேங்காய் 

பொட்டுக்கடலை 

சர்க்கரை 

எள்

கசகசா 

எண்ணெய்

செய்முறை

*சோமாஸ் செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவு, 2 டேபிள் ஸ்பூன் ரவை, சிறிதளவு உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

*இப்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். 

* மாவை சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளலாம் அதற்கு இடையில் சோமாசுக்கு தேவையான பூரணத்தை தயார் செய்து கொள்வோம்.

*சோமாஸ் உள்ளே வைக்கப்படும் பூரணம் செய்ய ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 கப் சர்க்கரை, 1/2 கப் பொட்டுக்கடலையை அரைத்து ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். 

இதையும் படிக்கலாமே: PCOS அறிகுறிகளை எளிதில் சமாளிக்க உதவும் உடற்பயிற்சிகள்!!!

*2 டேபிள் ஸ்பூன் எள் விதைகள் மற்றும் சிறிதளவு கசகசாவை பொன்னிறமாக வறுத்து அதனை பொட்டுக்கடலை சர்க்கரை கலவையில் சேர்த்து கொள்ளவும். 

*மேலும் ஒரு கப் துருவிய தேங்காயை வறுத்து அதையும் கலவையோடு சேர்த்துக் கொள்ளலாம். 

*வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து மொத்தமாக கலந்து கொள்ளுங்கள். 

*இப்போது பிசைந்து வைத்துள்ள மாவை மெல்லிசாக தேய்த்து வட்ட வடிவத்தில் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். 

*ஒவ்வொரு வட்டத்திலும் நாம் தயார் செய்து வைத்துள்ள பூரணம் சிறிதளவு வைத்து மடித்து தண்ணீர் பயன்படுத்தி மூடவும். 

*ஒரு ஃபோர்க் கரண்டி எடுத்து ஓரங்களில் அழுத்துங்கள். இப்போது நம்முடைய சோமாஸ் பொரிப்பதற்கு தயாராக உள்ளது. 

*கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சோமாசை போட்டு இருபுறமும் பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும். 

*அவ்வளவுதான் சுவையான மொறு மொறு இனிப்பு சோமாஸ் தயார். 

இது மொறுமொறுப்பாகவும், மிகவும் ருசியாக இருக்கும். நீண்ட நாட்கள் கெட்டுப் போகாது. நிச்சயமாக உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும்… செய்து சாப்பிட்டு மகிழுங்கள்!

Somas, sweet somas, sweet recipe, diwali sweet, சோமாஸ், இனிப்பு சோமாஸ், இனிப்பு, ஸ்வீட்,

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!
  • Close menu