சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் 45 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 315 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: உலகின் மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவும் உயர்ந்த புவிசார் அரசியல் பதற்றம், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளின் நாணயக் கொள்கைகள் மற்றும் அமெரிக்க தேர்தல் ஆகியவற்றின் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து உள்ளது.
இதன்படி, இன்று (அக்.28) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 315 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: கட்சியை உடைக்கும் முக்கிய அரசியல் தலைவர்.. எல்லையில் மாறும் அரசியல்!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.