உலர்ந்த அத்திய இந்த மாதிரி சாப்பிட்டா  ஹெல்தியா மட்டுமில்ல ஃபிட்டாவும் இருக்கலாம்!!! 

Author: Hemalatha Ramkumar
28 October 2024, 10:15 am

உலர்ந்த அத்திப்பழம் மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டுமே தனி தனியாக சாப்பிடும் பொழுது வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கின்றன. அதுவே இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து, உலர்ந்த அத்தியை தண்ணீரில் ஊற வைத்து பருகும் பொழுது வழக்கத்தை விட நமக்கு அதிக பலன்கள் கிடைக்கிறது. ஊற வைத்த உலர்ந்த அத்தி தண்ணீரில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது உடல் எடையை குறைக்க ஒரு அற்புதமான பானமாக அமைகிறது. மேலும் பொலிவான சருமத்திற்கும், ஆரோக்கியமான இதயத்திற்கும் இந்த பானத்தை நீங்கள் பருகலாம். செரிமானத்தை ஊக்குவித்து, ஆற்றலை அதிகரிக்கும் இந்த உலர்ந்த அத்தி தண்ணீரை குடிப்பதால் நமக்கு கிடைக்கும் பல்வேறு பலன்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதய ஆரோக்கியம் 

உலர்ந்த அத்தி தண்ணீரில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இது நம்முடைய இதயத்தை பாதுகாத்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் சத்தானது ரத்த அழுத்தத்தை சீராக்கி இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு ஒருவர் தாராளமாக இந்த உலர்ந்த அத்தி தண்ணீரை பருகலாம்.

செரிமான ஆரோக்கியம்

செரிமான ஆரோக்கியத்திற்கு உலர்ந்த அத்தி தண்ணீர் ஒரு அற்புதமான பானமாக இருக்கிறது. இதில் உள்ள லாக்சேட்டிவ் பண்புகள் மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. அதிக நார்ச்சத்து இருப்பதன் காரணமாக இது நம்முடைய செரிமானம் சிறந்த முறையில் நடைபெறுவதற்கு உதவுகிறது. 

ஆற்றல் அதிகரிப்பு

பலவிதமான ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக அமையும் உலர்ந்த அத்தி தண்ணீரில் வைட்டமின் A, B வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க், காப்பர், மாங்கனீசு மற்றும் இரும்பு சத்து போன்ற மினரல்களும் உள்ளன. இதனால் இது நம்முடைய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பையும், ஆற்றலையும் அதிகரிக்கிறது. 

இதையும் படிக்கலாமே: தீபாவளி ஸ்பெஷல்: கிரிஸ்பியா, டேஸ்டா சோமாஸ் செய்யறது நீங்க நினைக்குற மாதிரி அவ்வளவு கஷ்டமெல்லாம் இல்லைங்க…!!!

டயாபடீஸ்

நீரிழிவு நோய் இருப்பவர்கள் பொதுவாக ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட முடியும். அந்த பட்டியலில் உலர்ந்த அத்தி தண்ணீருக்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு. நார்ச்சத்து அதிகம் நிறைந்த இந்த தண்ணீர் சர்க்கரை பொறுமையாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது. இதனால் ரத்த குளுக்கோஸ் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது. எனவே நீரழிவு நோயாளிகள் தங்களுடைய டயட்டில் உலர்ந்த அத்தி தண்ணீரை சேர்ப்பதன் மூலமாக பலன் பெறலாம்.

உடல் எடையை குறைக்க

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு உலர்ந்த அத்திப்பழ தண்ணீர் ஒரு சிறந்த கருவியாக அமைகிறது. இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இதனால் நீங்கள் அதிகப்படியாக உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம். மேலும் கூடுதலாக இதில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பண்புகளும் காணப்படுவதால் உடல் எடை விரைவாக குறையும்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 155

    0

    0