அதிமுகவை அட்டாக் செய்யவில்லையா தவெக? முன்னாள் அமைச்சரின் பதில்!

Author: Hariharasudhan
28 October 2024, 12:39 pm

அதிமுக உடன் உடன்பாடில்லாத கொள்கை எதுவும் தவெகவில் இல்லை என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

விருதுநகர்: ‘Secular social justice ideologies’ என்ற மதச்சார்பற்ற சமூக நீதிக்கொள்கை என்பதை தனது அடிப்படைக் கொள்கையாக கையில் எடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகிய ஐந்து பேரை கட்சியின் கொள்கை வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டு உள்ளார்.

இதற்கான காரணத்தையும் விஜய் நேற்று (அக்.24) நடைபெற்ற தவெக மாநாட்டில் விளக்கினார். அதேநேரம், பெரியார், காமராஜர் ஆகியோரை வைத்த விஜய், அண்ணா கட்-அவுட் வைக்கவில்லை என்பதால் திராவிடக் கட்சிகளுக்கு ஆதரவு இல்லை என்ற பேச்சு ஓடியது.

ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மறுத்த விஜய், அண்ணாவை மேற்கோள் காட்டி, ‘ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்’ என்பதை கடைபிடிப்பதாக கூறினார். இதனால் திராவிடக் கட்சிகள் உடன் சேர்வார் என நினைக்கும் போது, திராவிட மாடல் ஆட்சி, குடும்ப அரசியல், ஊழல் கொள்ள கூட்டம் என திமுகவை தனது பாணியில் வெளுத்து வாங்கினார் விஜய்.

அப்படியென்றால், பாஜக உடனான கூட்டணிக்கு செல்வாரா விஜய் என எதிர்பார்த்த நிலையில், மதத்தின் பெயரால் பிரித்தாளும் அரசியலை மேற்கொள்ளும் பிளவுவாத சக்திகள் நமது எதிரிகள் என தெளிவுபடுத்திய விஜய், பாசிசம் என்பது அனைத்து நேரத்திலும் எதிரானது என தெரிவித்தார்.

இப்படி இருக்க, கூத்தாடிகள் என தன்னைக் கூறுபவர்களுக்கு, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர் என முன்னாள் தமிழக, ஆந்திர முதல்வர்களைக் கைகாட்டினார். அது மட்டுமல்லாமல், தன்னை நம்பி வருவோரை அரவணைத்து அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் எனவும் விஜய் கூறினார்.

இதையும் படிங்க: எனக்கும் விஜய்க்கும் ஒத்துவராது… அவரு கொள்கை வேறு.. எங்க கொள்கை வேறு : சீமான் தடாலடி!

இந்த அதிகாரப்பகிர்வு என்பது சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளின் குரலாக இருந்து வருகிறது. இதனால் இதற்கு ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். மேலும், திராவிட மாடலை எதிர்ப்பதாகக் கூறிய விஜய், திராவிடத்தை எதிர்ப்பதாகக் கூறவில்லை.

இதனை, திராவிடமும், தமிழ் தேசியமும் தமது இரு கண்கள் என விஜய் அறிவித்தார். இதனால் அதிமுக உடன் 2026-ல் தவெக கூட்டணி அமைக்குமோ என்ற கேள்வி அரசியல் மேடையில் எழுந்து உள்ளது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், “திமுக பற்றி இவர்கள் தான் எங்கள் முதல் எதிரி எனப் பேசி உள்ளார். நாங்கள் அதனை வரவேற்கிறோம்.

கொள்கை நிலைப்பாடை வெளிப்படுத்திய முதல் பேச்சிலேயே, போலி திராவிட மாடலை எதிர்த்து குரல் கொடுத்தது மிக முக்கியம் என்றே நாங்கள் நினைக்கிறோம்.

எங்களைப் பொறுத்தவரை, அதிமுக உடன் உடன்பாடு இல்லாத கொள்கை எதுவும் இல்லை. செயல்பாட்டுக்கு கொண்டு வராதது திமுகவின் பிரச்னை. அவர் என்ன நிலைப்பாடு எடுத்து இருக்கிறாரோ, அதனை நாங்கள் வரவேற்கிறோம்” என்றார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 97

    0

    0