பூமிக்கு 260 மைல் தொலைவில் இருந்து தீபாவளி வாழ்த்து.. பிரார்த்திக்கும் மக்கள்!

Author: Hariharasudhan
29 October 2024, 12:44 pm

பூமியில் இருந்து சுமார் 260 மைல் தொலைவில் இருந்துகொண்டு தனது தீபாவளி வாழ்த்துகளை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்து உள்ளார்.

கலிபோர்னியா: கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். இந்த பயணத் திட்டம் 8 நாட்களாக இருந்தது. ஆனால், சில வானிலை மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் காரணமாக 8 நாள் பயணம், 8 மாதங்களாக நீண்டது. இதனிடையே, சுனிதா வில்லியம்ஸ் உட்பட இருவரை அழைப்பதற்காகச் சென்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போயிங் விமானம், ஹீலியம் உள்ளிட்ட தொழில்நுட்பக் குறைபாட்டால் மீண்டும் பூமிக்கே திரும்பியது. இதனால் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தே ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை மறுநாள் (அக்.31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும், இந்த நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து தீபாவளி வாழ்த்துக்கள். இன்று வெள்ளை மாளிகையிலும், உலகெங்கிலும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில், பூமியில் இருந்து 260 மைல்களுக்கு அப்பால் தீபாவளியைக் கொண்டாடும் தனித்துவமிக்க வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. தீபாவளி மற்றும் பிற இந்தியப் பண்டிகைகளைப் பற்றி எங்களுக்கு கற்பிப்பதன் மூலம், எனது அப்பா, தனது கலாச்சார வேர்களைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும், தீபாவளி பண்டிகையில் பங்கேற்றதற்காகவும், சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரித்ததற்காகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில், தங்களது தீபாவளி வாழ்த்துகளை பலரும் பகிர்ந்த நிலையில், விரைவில் நல்ல உடல் நலத்துடன் பூமிக்கு திரும்ப வேண்டும் எனவும் சுனிதா வில்லியம்ஸ்க்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளனர். மேலும், இவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவர் என நாசா தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க : வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிப்பு!

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 565

    0

    0