ஊழலை பற்றி விஜய் பேசலாமா? பகீர் கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2024, 1:25 pm

நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக தனது விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்றினார். பின்னர் கட்சி பெயர், கட்சி கொடி என அறிமுகம் செய்தார்.

தனது 69வது படம்தான் கடைசி என கூறிய விஜய், முதல்முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை நடத்தினார்.

நேற்று முன்தினம் நடந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்றது பெரிய விஷயமாக பேசப்பட்டது. அதே போல தனது முதல் அரசியல் பேச்சை பேசிய விஜய், ஊழல், லஞ்சத்தை முற்றிலும் ஒழிப்பதாக கூறினார்.

இந்த நிலையில் விஜய் வீட்டில் சில வருடங்களுக்கு முன் நடந்த ஐடி ரெய்டு வீடியோக்கள் அதிகமாக தற்போது பகிரப்பட்டு வருகிறது.

மாஸ்டர் படத்தின் போது விஜய் வீட்டில் நடந்த ரெய்டின் மூலம் அவர் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது தெரிந்தது. தற்போது தனது 69வது படத்திற்கு விஜய் 275 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதையும் படியுங்க: சைலண்டா இருந்தே இயக்குநரை கரெக்ட் செய்த மாமன்னன் பட நடிகை.. விரைவில் திருமணம்!

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் பேசிய பழைய வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது. இயக்குநர் ஏஎல் விஜய்யின் தந்தை தான் ஏஎல் அழகப்பன்

இவர் தலைவா படத்தின் போது ஏற்பட்ட விஷயங்களை அந்த வீடியோவில் கூறியுள்ளார். அதில், தலைவா படத்திற்கு அப்போதைய ஆட்சியில் இருந்த அதிமுக கடும் நெருக்கடி கொடுத்தது. அப்போது ரிலீஸ் செய்ய முடியாமல் அண்டை மாநிலங்களில் படம் வெளியான பின்புதான் தமிழகத்தில் சொன்ன தேதியை தாண்டி வெளியானது.

அந்த படத்திற்கு விஜய்க்கு நான் எவ்வளவு சம்பளம் கொடுத்தேன் தெரியுமா? உச்ச நட்சத்திரங்களுக்கு அவர்களின் சம்பளத்தில் பாதியை செக் ஆக கொடுப்போம். மீதியை பணமாக கொடுப்போம். இல்லையென்றால் 30% வரி கட்ட வேண்டும். அது ஐடி அதிகாரிகளுக்கே தெரியும். நாங்களும் அப்படித்தான் வாங்குவோம். அப்படித்தான் கொடுப்போம் என கூறியுள்ளார்.

இந்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 387

    0

    0