நான் முதல்வர், விஜய் துணை முதல்வரா? இபிஎஸ் தடாலடி பதில்

Author: Hariharasudhan
29 October 2024, 3:19 pm

தவெகவுடன் கூட்டணி அமைத்து நான் முதல்வர், விஜய் துணை முதல்வர் என்ற கற்பனைக்கெல்லாம் பதிலளிக்க முடியாது என இபிஎஸ் கூறியுள்ளார்.

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில், நலிந்த நிலையில் உள்ள 171 தொழிலாளர்களுக்கு ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இந்தக் காசோலையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “1,000 கவுரவ உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. இந்த காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? கல்லூரிகளில் உதவிப் பேராசியர் பணியும் அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ளது. இந்த விவகாரம், மாணவர்களின் எதிர்கால பிரச்னை என்பதால் அரசு உடனடியாக காலி இடங்களை நிரப்ப வேண்டும்” என வலியுறுத்தினார்.

தொடர்ந்து விஜய் மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஒவ்வொரு கட்சிக்கும் என ஒரு கொள்கை இருக்கிறது. விஜய் அவரது கொள்கையை தெரிவித்து இருக்கிறார். அது சரியா அல்லது தவறா என்று நான் கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் உள்ளது. விஜய் இப்போதுதான் கட்சி தொடங்கி மாநாடு நடத்தி உள்ளார். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் சூழலுக்கு தகுந்தவாறு அமைக்கப்படும் ஒன்று” என பதில் அளித்தார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி எது? வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது

தொடர்ந்து, தவெக உடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால், யார் முதல்வர், யார் துணை முதல்வர் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த இபிஎஸ், “மற்றபடி நாங்கள் தவெக உடன் கூட்டணி வைத்து, அப்போது நான் முதல்வரானால், அவரை துணை முதல்வராக்குவேனா என்றெல்லாம் கற்பனை கேள்வி கேட்டால், என்னால் பதில் கூற முடியாது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் விஷயம். எனவே, அதனைப் பற்றி அப்போது பேசலாம்” என்றார்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!