நடிகரோட மகன் நடிச்சா நெப்போடிசமா… வாயை கொடுத்து சிக்கிய பிரபல நடிகரின் மகன்!
Author: Udayachandran RadhaKrishnan29 October 2024, 4:04 pm
தமிழ் சினிமாவில் கடுமையாக உழைத்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர்களின் பட்டியல் ஏராளம் உண்டு.
அதில் மிக முக்கியமாவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். சின்ன சின்ன ரோல்களில் நடித்து பின்னர் ஹீரோ ஆனார். ஹீரோ ரோல் மட்டும் இல்லை எந்த ரோல் கொடுத்தாலும் நடிப்பேன் என சொல்லி அடிக்கும் விஜய் சேதுபதி, வில்லன் ரோலில் மிரட்டினார்.
இப்படியிருக்கையில், விஜய் சேதுபதி மகனான சூர்யா சேதுபதி, ஹீரோவாக களமிறங்குகிறார். ஏற்கனவே நானும் ரவுடி தான் படத்தில் ஒரு சீனில் நடித்த அவர், சிந்துபாத் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்,.
தற்போது ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் பீனிக்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பூஜையின் போது உங்க தந்தை வரவில்லையா என சூர்யாவிடம் கேட்ட போது, அப்பா வேற நான் வேற… இது என்னோட படம், அதனால்தான் என் பேருக்கு பின்னாடி சேதுபதியை சேர்க்கவில்லை என கூறினார்.
அதே சமயம் படத்தோட டீசர் வெளியீட்டின் போது விஜய் சேதுபதி வந்திருந்தார். இது குறித்து அப்போது சூர்யாவிடம் கேட்ட போது இன்று தந்தையர் தினம் என்பதால் அழைத்து வந்தேன் என கூறி சமாளித்தார்.
பையன் சின்னவனா இருந்தாலும் ஓவர் பேச்சு என நெட்டிசன்கள் விமர்சித்தனர். டீசர் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் விஜய் சேதுபதி மகன்.. சமீபத்தில் பேசிய அவர், டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம், போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம், நடிகர் மகன் நடிகர் ஆகக்கூடாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
சூர்யா சேதுபதி பேச்சை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். நெப்போட்டிசத்துக்கு ஆதரவாக இவரின் கருத்து உள்ளதாகவும், டாக்டர் மகன் டாக்டர் ஆவது கூட ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு, நடிகர் மகன் நடிகர் ஆவது ரொம்ப சுலபம்.. பையனுக்கு ஓவர் வாய் துடுக்கு.. இஷ்டத்துக்கு பேசுறாரே என கழுவி ஊற்றி வருகின்றனர்.