அடடே ஜோடி சூப்பரா இருக்கே…. காதலனுடன் மாமன்னன் நடிகை – விரைவில் டும்டும்டும்!

Author:
29 October 2024, 10:21 pm

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் ஆன ரவீனா ரவி பல்வேறு திரைப்படங்களுக்கு பல்வேறு டாப் ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்து பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்ட்டாக இருந்து வந்தார். குறிப்பாக இவர் கத்தி, ஐ உள்ளிட்ட படங்களுக்கு ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.

raveena

ஐ திரைப்படத்தில் எமி ஜாக்சனுக்கு இவரது குரல் மிகவும் பொருத்தமாக இருந்தது. அந்த படத்தில் டயலாக் மற்றும் குரல் உள்ளிட்ட அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. மேலும் கத்தி திரைப்படத்தில் நடிகை சமந்தாவுக்கு குரல் கொடுத்ததும் ரவீனா ரவி தான் .

இது தவிர சாட்டை, 555, அனேகன் , பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கு இவர் குரல் கொடுத்திருக்கிறார். இதனிடையே ஒரு கிடாயின் கருணை மனு , காவல்துறை உங்கள் நண்பன், லவ் டுடே , மாமன்னன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்தும் இருக்கிறார்.

மாமன்னன் திரைப்படத்தில் வில்லன் நடிகரான பஹத் பாசில் மனைவியாக நடித்திருப்பார்.அவர் பெரிதாக டயலாக் எதுவுமே பேசவில்லை என்றாலும் கூட அந்த கதாபாத்திரம் மக்களின் மனதில் நிலைக்கும் படியாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

raveena

இந்த நிலையில் ரவீனா ரவி தற்போது தனது காதலனுடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தன்னுடைய காதலன் வருங்கால கணவர் என அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்த புகைப்படங்களை பார்த்த ரவீனா ரவியின் ரசிகர்கள் பலரும் எங்கள் இதயத்தை சுக்குநூறாக உடைத்த புகைப்படம் எனக் கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 92

    0

    0