கல்லீரல் ஆரோக்கியமா இல்லன்னா இந்த மாதிரி அறிகுறிகள் கட்டாயம் இருக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
30 October 2024, 10:38 am

கல்லீரல் என்பது நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான ஒரு உட்புற உறுப்பு. இது பல்வேறு முக்கியமான செயல்பாடுகளை செய்கிறது. குறிப்பாக நமது உடலில் உள்ள நச்சு பொருட்களை வெளியேற்றுவதற்கு கல்லீரல் பொறுப்பாகிறது. ரத்தத்தை சுத்தம் செய்து, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை செயல்படுத்துவதும் கல்லீரல் தான். இந்த கல்லீரல் டீ-டாக்சிஃபிகேஷன் அதாவது நச்சு நீக்கம், மெட்டபாலிசம், பைல் உற்பத்தி, புரோட்டீன் உற்பத்தி மற்றும் நம்முடைய உடலில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் மினரல்களுக்கான சேமிப்பு கிடங்காக அமைகிறது. 

நம்முடைய உடலில் தன்னைத்தானே சீரமைத்துக் கொள்ளும் உறுப்புகளில் கல்லீரல் ஒன்று. எனினும் இதற்கு மோசமான சேதம் ஏற்பட்டாலோ நீண்ட நாட்களாக காயம் இருந்தாலோ அல்லது அளவுக்கு அதிகமான மதுபானம் அல்லது போதை மருந்துகளை பயன்படுத்துவது போன்றவை கல்லீரல் செயல் இழப்பை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் சர்ஹோசிஸ் அல்லது புற்றுநோயையும் ஏற்படுத்தலாம். 

மது அருந்தினால் மட்டுமே கல்லீரல் சேதம் அடையும் என்பது அர்த்தமல்ல. மோசமான உணவின் காரணமாக அதன் கெமிக்கல் ரியாக்ஷன் பாதிக்கப்பட்டு அதனால் கல்லீரலின் ஆரோக்கியம் மோசமாகலாம். கல்லீரலானது பைல் சாற்றை சேமிப்பதால் இது பெரும்பாலும் அமிலம் மற்றும் கெமிக்கல் ரியாக்ஷன் உடன் அடிக்கடி தொடர்பு கொள்கிறது. எனவே உங்களுடைய கல்லீரல் சேதமடைந்திருப்பதை உணர்த்தும் ஒரு சில அறிகுறிகளை இந்த பதிவில் பார்க்கலாம். 

மஞ்சள் காமாலை 

ஒருவேளை கல்லீரல் தொற்று இருந்தால் உடனடியாக உங்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்படும். இதனால் உங்களுடைய சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். 

வீக்கம் 

அடிவயிறு, கால்கள் மற்றும் முகத்தில் அசாதாரணமான வீக்கம் ஏற்படுவது கல்லீரல் சேதத்தை குறிக்கும். 

இதையும் படிக்கலாமே: தீபாவளி ஸ்பெஷல்: உங்க வீட்டு குட்டீஸ்களை கவர் பண்ண யம்மியான ரசமலாய் ரெசிபி!!!

பசியின்மை, உடல் எடை இழப்பு 

உங்களுடைய கல்லீரல் சேதமடைந்து இருந்தால் உங்களுக்கு பசி எடுக்காது. மேலும் எதிர்பாராத வகையில் அதிக அளவு உடல் எடை குறையும். 

இது தவிர உங்களுக்கு அடிக்கடி குமட்டல் அல்லது ரத்த வாந்தி வரலாம். கல்லீரல் புற்றுநோய் அல்லது கல்லீரல் செயலிழப்பை தவிர உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இதனை சரியான உணவு மற்றும் தீவிரமான தடுப்பு வழிகள் மூலமாக சரி செய்யலாம். 

மேலும் வகை 2 நீரழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும் ஸ்லீப் ஆப்னியா போன்ற காரணங்களாலும் கல்லீரல் சேதமடையலாம். கல்லீரல் சேதமடைந்திருப்பதை வெளிப்படுத்தும் பிற அறிகுறிகள்:

தோலில் அரிப்பு, கருமை நிற சிறுநீர், மலத்தில் நிறமாற்றம், அடிக்கடி வெட்டுகள் ஏற்படுவது, ரத்தம் கசிதல், மூச்சு விடுவதில் சிரமம், நடுக்கம், குழப்பம், தூக்க கலக்கம், மூச்சு விடும் போது ஒருவித இனிப்பு வாசனை வருவது போன்றவை அடங்கும்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?