உடல் வலிய சாதாரணமா நினைக்காதீங்க… பெண்களுக்கு ஏற்படும் ஹார்ட் அட்டாக் அறிகுறிகள்!!!

Author: Hemalatha Ramkumar
30 October 2024, 3:43 pm

பொதுவாக பெண்களை விட ஆண்களுக்கு தான் ஹார்ட் அட்டாக் அதிகமாக ஏற்படும் என்று நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் ஆண்களை காட்டிலும் அதிக பெண்கள் ஹார்ட் அட்டாக் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். ஹார்ட் அட்டாக்கின் ஒரு சில அறிகுறிகள் நமக்கு வழக்கமாக ஏற்படும் பொதுவான சில பிரச்சனைகளின் அறிகுறிகளைப் போலவே இருப்பதன் காரணமாக அவற்றை நாம் அலட்சியமாக நினைத்து விடுகிறோம். எனவே இந்த பதிவில் பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் பொழுது அவர்களுக்கு என்னென்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

மூச்சு விடுவதில் சிரமம் 

நெஞ்சு வலியுடன் ஒருவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்படலாம். 

நெஞ்செரிச்சல் 

பொதுவாக நெஞ்செரிச்சல் ஏற்படும்பொழுது அது செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருக்கும் என்று தான் கருதுவோம். ஆனால் இதுவும் ஹார்ட் அட்டாக்கின் முக்கியமான ஒரு அறிகுறியாக கருதப்படுகிறது. 

குளிர்ந்த வியர்வை

காரணமே இல்லாமல் குளிர்ந்த வியர்வை ஏற்படுவது பெண்களில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான ஒரு அறிகுறி ஆகும். 

நெஞ்சு வலி 

நெஞ்சில் ஒருவித அழுத்தம், இறுக்கமான உணர்வு ஆகியவை ஹார்ட் அட்டாக்கின் முதல் எச்சரிக்கை அறிகுறியாக அமைகிறது. 

உடல் வலி 

ஹார்ட் அட்டாக் ஏற்படும்பொழுது கழுத்து, முதுகு, தோள்பட்டை மற்றும் பிற உடல் உறுப்புகளில் பெண்கள் வலியை அனுபவிக்கலாம். 

குமட்டல் 

ஹார்ட் அட்டாக் வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தி அதனால் வாந்தி, குமட்டல் மற்றும் பிற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. 

சோர்வு 

திடீரென்று மற்றும் அடிக்கடி சோர்வாக உணர்வது பெண்களில் ஹார்ட் அட்டாக்கிற்கான ஒரு மிக முக்கியமான அறிகுறி. 

ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க என்னென்ன செய்யலாம் 

*ஹார்ட் அட்டாக் ஏற்படுத்துவதற்கான அபாய காரணிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், டயாபடீஸ், புகைப்பிடித்தல் மற்றும் ஏற்கனவே குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் இருப்பது போன்றவை ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: கல்லீரல் ஆரோக்கியமா இல்லன்னா இந்த மாதிரி அறிகுறிகள் கட்டாயம் இருக்கும்!!!

*தினமும் உடற்பயிற்சி செய்வது மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது மிகவும் அவசியம். உடற்பயிற்சி என்பது ஜிம்முக்கு சென்று தான் செய்ய வேண்டும் என்பது கிடையாது.

நடை பயிற்சி கூட எளிமையான உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. எனவே தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

*இதயத்திற்கு ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுங்கள். அதே நேரத்தில் சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் சர்க்கரை போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளில் இருந்து விலகி இருக்கவும். பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். 

*ஒருவேளை நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால் புகை பிடிப்பதை நிறுத்தி விடுவது நல்லது. 

*பெண்களுக்கு பொதுவாக மெனோபாஸ் காரணமாக இதய நோய் ஏற்படாது. ஆனால் மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம். இது தவிர மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பும் இதய நோயை உண்டாக்க வாய்ப்புள்ளது. இதனை சமாளிப்பதற்கு நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று ஹார்மோன் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 102

    0

    0