விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய நபராக பார்க்கப்பட்டவர் தான் சீரியல் நடிகர் அர்னவ். இவர் சீரியல் நடிகை ஆன திவ்யா என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அவரை கர்ப்பமாகி விட்டு பின்அவரை பிரிந்து விட்டு வேறொரு சீரியல் நடிகையான அன்ஷிதா என்பவருடன் தகாத உறவு வைத்துக் கொண்டார்.
அர்னவ் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டார் எப்படி இருக்க முன்னாள் மனைவியான திவ்யா சமீபத்தில் தனது Instagram லைவ்வில் வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது சமூக வலைதளங்களில் நான் அர்னவ்வின் முன்னாள் மனைவி என்று சொல்கிறார்கள்.
ஆனால் முறைப்படி எங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஒரு வேலை அவர் வேண்டுமானால் விவாகரத்து ஆகிவிட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை இதுதான். நான் சிங்கிள் மதராக பல பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கிறேன் என திவ்யா கூறியிருக்கிறார் .
அவர் கூறியிருப்பதை பார்த்தால் அர்னவ்வுடன் மீண்டும் சேர்ந்து வாழ திவ்யா ஆசைப்படுகிறாரோ? என்ற ஒரு கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. மேலும் பேசிய அவர் வாழ்க்கையில் நான் பார்க்காத பிரச்சனையே இல்லை. என் கர்ப்ப காலத்தில் என் வாழ்க்கை சந்திக்காத பல பிரச்சனைகளை நான் சந்தித்துள்ளேன். குழந்தையை வச்சுக்கிட்டே ஷூட்டிங் செல்வேன். அது ரொம்ப வேதனையாகவும் மிகவும் மோசமான அனுபவமாகவும் எனக்கு இருந்தது.
இப்படி நான் தனி ஆளாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென எனக்கு உறுதுணையாக இருந்து வந்த என்னுடைய அம்மா இறந்து விட்டார். அது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இப்போது என்னுடைய அப்பாதான் என்னுடைய இரண்டு மகள்களையும் பார்த்துக் கொள்கிறார். நான் சூட்டிங் சென்று வருகிறேன் .
வாழ்க்கையில் அப்பா அம்மா தவிர வேற யாரையும் நம்பாதீங்க. அவங்க மட்டும்தான் நீங்க நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஒருவரின் வாழ்க்கையை கெடுத்துவிட்டு யாரும் நல்லா இருக்கவே முடியாது. இந்த உலகத்துல நடக்குற எல்லாமே கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இப்போதைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால், உண்மையில் வானத்திலிருந்து எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் .
நான் இப்போது என் குடும்பம் வாழ்க்கை என சந்தோஷமா இருக்கேன். அதுக்கு காரணம் நீங்கதான். தமிழக மக்களை நான் என்றைக்கும் மறைக்கவே மாட்டேன். ஒவ்வொரு முறையும் நான் வாழ்க்கையில் துவண்டு போகும் போது எல்லாம் என்னுடைய எனக்கு உறுதுணையாகவும் எனக்கு தைரியமாகவும் ஊக்கமளித்து வந்தது நீங்கள் தான் .
உன்னால பண்ண முடியும் திவ்யா பண்ணு என்று எனக்கு ஊக்கம் அளித்து ஆதரவு தெரிவித்த பல பேர் என்னுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ரொம்ப நன்றி தெரிவிக்கிறேன். உங்களுடைய ஆதரவு எனக்கு தொடர்ந்து தேவை என மிகவும் எமோஷ்னலாக திவ்யா அந்த லைவில் பேசி இருக்கிறார் .இதை கேள்விப்பட்ட நெட்டிசன்ஸ் சொல்றதெல்லாம் சரி நாங்க ஏற்றுக்கொள்கிறோம். ஆதரவாக இருக்கிறோம். ஆனால் தயவு செய்து மீண்டும் அர்னவ் உடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வைத்திருக்காதீர்கள். அர்னவ் நல்லவர் அல்ல என மீண்டும் திவ்யாவுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள்.
0
0