2வது திருமணம் செய்த சன் டிவி ரீல் ஜோடி வீட்டில் விசேஷம்.. தல தீபாவளியில் வெளியான அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2024, 4:01 pm

சன் டிவி சீரியலில் ரீல் ஜோடியாக வந்து ரசிகர்களை கவர்ந்த ஜோடிகள் 2வது திருமணம் செய்த நிலையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சன் டிவியில் கடந்த 2022ம் ஆண்டில் இருந்து ஒளிப்பரப்பான மகராசி சீரியலில் முதலில் நடிகை திவ்யா ஸ்ரீதர் நடித்தார்.

அவர் விலகியதும் அந்த கதாபாத்திரத்தில நாதஸ்வர நடிகை ஸ்ரீத்திகா நடித்தார். அதில் நடித்த போது ரீல் கணவராக நடித்த எஸ்எஸ்ஆர் பேரன் ஆர்யனுடன் காதல் வயப்பட்டார்.

ஆர்யன் ஏற்கனவே சீரியல் நடிகை நிவேதிதாவை திருமணம் செய்திருந்து கருத்து வேறுபாட்டால் 3 வருடத்திற்கு முன் விவாகரத்து பெற்றார்.

இதே போல நடிகை ஸ்ரீத்திகா பல படங்களில் நடித்து, பின்னணி குரலும் கொடுத்து வந்தார். ஆனால் நாதஸ்வரம் சீரியல் அவரை வேற லெவல் டாப்பில் தூக்கிவிட்டது.

ஸ்ரீத்திகாவும் 2019ல் கேரளாவை சேர்ந்த ஷானீஷ் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக விவாகரத்து செய்தனர்.

இதன் பின் மகராசி சீரியலில் நடித்த போது ஆர்யனுடன் காதலில் விழுந்து திருமணத்தில் இந்த ஜோடி கைக்கூடியது. பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணமும் செய்தனர்.

நேற்று தீபாவளி என்பதால் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவரும் தீபாவளி வாழ்த்துக்கள் என கூறி அவரும் அவரது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அதைப் பார்த்ததும், நடிகை ஸ்ரீத்திகா கர்ப்பமானது போல் உள்ளதே வாழ்த்துக்கள்… நீங்க ஓபனா சொல்லனாலும் நாங்க கண்டுபிடிச்சிடுவோம் என வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!