மூட்டு வலி பாடாய்படுத்துதா… உங்களுக்கான சிம்பிள் ஹோம் ரெமடீஸ்!!!
Author: Hemalatha Ramkumar1 நவம்பர் 2024, 6:46 மணி
மூட்டு வலி என்பது ஒருவரை அன்றாட வேலைகளை செய்ய விடாமல் தடுக்கும் ஒரு மோசமான பிரச்சனையாகும். இது ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதிலும் ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினை இருப்பவர்கள் தாங்க முடியாத மூட்டு வலியை அனுபவிப்பார்கள். இந்த மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற உதவும் சில பானங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பால்
பாலில் வீக்க எதிர்ப்பு விளைவுகள் இருப்பதால் இது மூட்டுகளில் உள்ள வீக்கத்தை குறைத்து வலியிலிருந்து நிவாரணம் தருகிறது. மேலும் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் மேலும் தீவிரமாகாமல் பார்த்துக் கொள்கிறது.
காபி
காபியில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அதனோடு சேர்ந்து வீக்க எதிர்ப்பு பாலிபீனால்கள் இருக்கின்றன. காபியானது நமது உடலில் தீங்க விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் சண்டை போடுகிறது. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் நமது உடலில் பல்வேறு விதமான செல் சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை.
ஸ்மூத்திகள்
தயிர் மற்றும் ஃபிரெஷான பழங்களை கொண்டு செய்யப்படும் ஸ்மூத்திகளில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பதால் ஆர்த்ரைட்டிஸ் காரணமாக ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
இதையும் படிக்கலாமே: தீபாவளிய ஜோரா கொண்டாடியாச்சு… இப்போ செரிமான ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டுமா…???
சிவப்பு ஒயின்
சிவப்பு ஓயினில் ரெஸ்பரேட்டரால் என்ற காம்பவுண்ட் உள்ளது. இந்த காம்பவுண்ட் வீக்க எதிர்ப்பு விளைவுகளை கொண்டு உள்ளதால் ஆர்த்ரைட்டிஸ் பிரச்சனை இருப்பவர்கள் ரெட் ஒயின் குடித்த வர வலியில் இருந்து விடுபடலாம்.
தண்ணீர்
நம்முடைய உடலில் உள்ள நச்சுக்களை தொடர்ச்சியாக வெளியேற்றுவதற்கு நாம் தொடர்ந்து போதுமான அளவு தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பது நம்முடைய மூட்டுகளின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து வலி ஏற்படுவதை குறைக்கிறது.
பழச்சாறுகள்
சர்க்கரை சேர்க்கப்படாத ஆரஞ்சு, பைனாப்பிள் போன்ற பழங்களால் செய்யப்பட்ட ஃபிரஷ் ஜூஸில் வைட்டமின் C அதிகம் உள்ளது. மேலும் இவை நமக்கு தேவையான ஆன்டி-ஆக்சிடன்ட்களை வழங்கி வீக்கத்துக்கு காரணமாக அமையும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் சண்டை போடுகிறது.
தேநீர்
ஆர்த்ரைட்டிஸ் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு அற்புதமான பானம் தேநீர். இவற்றில் பாலிபீனால்கள் போன்ற வீக்க எதிர்ப்பு காம்பவுண்டுகள் இருப்பதால் நம்முடைய எலும்புகளை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது.
காய்கறி சாறுகள்
தக்காளி மற்றும் செலரி போன்ற காய்கறி சாறுகளை பருகுவது ஆர்த்ரைட்டிஸ் வலி மற்றும் வீக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் தரும்.
இஞ்சி கஷாயம் ஆர்த்ரைட்டிஸ் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு இஞ்சி சாறு பருகலாம். மோசமான மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும் பண்புகள் இஞ்சி சாற்றில் உள்ளது.
0
0