இந்த தீபாவளிக்கு தான் புது Dress… கறிசோறு சாப்பிடுறேன் – பிக்பாசில் கலங்கிய ஜெஃப்ரி!

Author:
3 November 2024, 12:27 pm

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் நபர் தான் ஜெஃப்ரி .இவர் கானா பாடகராக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலமாக ஒட்டுமொத்த ஆடியன்ஸ் இதயங்களையும் வென்றிருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்து ஜெஃப்ரியும் அவரது விளையாடும் விதமும் மக்கள் அனைவருக்கும் பிடித்து விட்டது. இந்த சீசனில் ஜெஃப்ரி 9-வது போட்டியளாக போட்டியாளராக நுழைந்தார்.ஜெப்ரி கானா பாடகராக அறியப்பட்டார். கானா இசையின் மீது அவர் அன்பும் பங்களிப்பும் அதிகமாக வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் .

சொந்தமாக பாடல் வரிகளை எழுதி பாடல் பாடி அனைவரையும் கவர்ந்த ஜெஃப்ரியின் நாட்டுப்புறப் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. பாடல்களால் ரசிகர்கள் இதயங்களை வென்றிருக்கிறார். தன்னுடைய அம்மாவை மகிழ்விப்பதற்காக தான் இந்த நிகழ்ச்சியில் நுழைந்திருப்பதாக அவர் கூறினார்.

மேலும் அவரது பயணம் மிகவும் எளிமையான குடும்பத்திலிருந்து வந்தது என்பதால் ஜெப்ரிக்கு பலரும் ஆதரவுகளை கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல்கள் என்னவென்றால் ஜெப்ரி தீபாவளி தினத்தன்று பிக் பாஸ் வீட்டில் நான் இப்போதுதான் புது டிரஸ் இந்த தீபாவளிக்கு தான் போடுகிறேன் .

எப்பவுமே எங்கள் வீட்டில் மிகவும் எளிமையான குடும்பம் தீபாவளி தினத்தில் புது டிரஸ் என்பதை நான் இதுவரைக்கும் போட்டதே கிடையாது. இதுதான் முதல் முறை மேலும் இந்த தினத்தில் கறிசோறு சாப்பிடுவதும் இதுதான் எனக்கு முதல் அனுபவமாக இருக்கிறது என தன்னுடைய குடும்பத்தின் ஏழ்மை நிலையை வெளிப்படுத்திக் கூற சக போட்டியாளர்கள் அனைவரும் மிகுந்த வேதனைப்பட்டனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாக ஜெஃப்ரி தன்னுடைய தாயின் இலட்சியத்தையும் அவரது ஆசையும் நிறைவேற்ற நிச்சயம் இந்த நிகழ்ச்சி டைட்டில் வின்னராக வரவேண்டும் சிறப்பாக விளையாட அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!