KGF 3’ல் அஜித் நடிக்கிறாரா…? KGF நடிகை சொன்ன சூப்பர் தகவல்!

Author:
3 November 2024, 3:59 pm

கன்னட திரைப்பட உலகம் சினிமாவியே திரும்பி பார்க்க வைத்தது கேஜிஎப் திரைப்படத்தின் மூலமாகத்தான். 2022 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கேஜிஎப் 2 .

இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து கே ஜி எஃப் 2 மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் வெளிவந்து உலகளவில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலிட்டி மாபெரும் சாதனையை படைத்திருந்தது. கேஜிஎப் படத்திலிருந்து கேஜிஎப்3 படத்திற்கான லீட் கொடுத்திருப்பார் இயக்குனர் பிரசாந்த் நீல். இதனால் கே ஜி எஃப் திரைப்படம் எப்போது வெளியாகும் எப்போது துவங்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள் .

இப்படியான நேரத்தில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்ற ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருந்தது. இதனால் கேஜிஎப் திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறாரா? என்ற ஒரு கேள்வி எழுந்தது.

மேலும் பிரசாத் நீலின் யூனிவர்சாக அந்த திரைப்படம் அஜித் நடித்தால் மாறும் என பேசி வந்தார்கள். ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் கேஜிஎப் திரைப்படத்தில் நடித்த நடிகை மாளவிகா அவினாஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேஜிஎப்3 லீடுக்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாக கூறி இருக்கிறார் .

அப்போது இந்த படத்தில் அஜித் நடிக்கிறாரா? என தொகுப்பாளர் கேள்வி எழுப்பியதற்கு எனக்கு தெரியவில்லை இயக்குனரின் போன் நம்பர் வேண்டும் என்றால் தருகிறேன் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் என கூறினார். இதனால் நடிக்கிறாரா? இல்லையா? என்று ஒரு குழப்பமாகவே இருந்திருக்கிறது. ஒரு வேலை அஜித் கேஜிஎப்3 திரைப்படத்தில் நடித்தால் அது வேற லெவல் வெற்றி திரைப்படமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!