மேலும் மேலும் குறையும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
5 November 2024, 10:31 am

சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 355 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னை: தீபாவளி விடுமுறை நாட்களையொட்டி, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே இருந்து வந்தது. அதேநேரம், சர்வதேச அளவில், மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றம், உலகின் ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளின் நாணயக் கொள்கைகள் மற்றும் அமெரிக்க தேர்தல் போன்றவற்றின் காரணமாகவும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து உள்ளது.

அதன்படி, இன்று (நவ.5) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 355 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி ஒரு கிராம் 1 ரூபாய் குறைந்து 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதையும் படிங்க : இரண்டு எருமை மாடுகள்…. மைனா நந்தினி பதிவிற்கு அதிரும் கமெண்ட்கள்!

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu