இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோமா..???

Author: Hemalatha Ramkumar
5 November 2024, 5:19 pm

எல்லா வகையான உணவுகளையும் நம் குடல் ஒரே மாதிரியாக வரவேற்பது கிடையாது.  ஒரு சில உணவுகள் நமக்கு மிகவும் ஃபேவரட் ஆக இருப்பதைப் போலவே குடலுக்கும் ஒரு சில உணவுகள் பிடித்தவையாக இருக்கும், இன்னும் சில மோசமானவையாக இருக்கலாம். அப்படி பார்க்கும் பொழுது செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு சில உணவுகளையும், இரவு நேரத்தில் அவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம். 

செரிமான செயல்முறையானது வழக்கமாக 10 முதல் 72 மணி நேரம் வரை எடுக்கலாம். நீங்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிடுகிறீர்கள், சாப்பிடும் நேரம், எவ்வளவு நேரம் உணவை மெல்லுகிறீர்கள் மற்றும் மெட்டபாலிசம் விகிதம் ஆகிய அனைத்தின் அடிப்படையில் இது நிர்ணயிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒருவரின் வயது, மன அழுத்த அளவுகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் உணவு ஜீரணம் செய்யப்படுவதற்கான நேரம் மாறுபடும். 

எந்தெந்த உணவுகளை ஜீரணம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? கார்போஹைட்ரேட்டுகள் கார்போஹைட்ரேட்டுகள் விரைவாக செரிமானம் செய்யப்படும். எளிமையான கார்போஹைட்ரேட்டுகள் அதாவது பழங்கள், அரிசி, பாஸ்தா போன்றவை தோராயமாக 20 நிமிடங்களில் செரிமானமாக ஆரம்பித்து, 2 முதல் 3 மணி நேரங்களில் முற்றிலுமாக செரிமானம் ஆகிவிடுகிறது. மறுபுறம் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் அதாவது முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் காய்கறிகளை செரிமானம் செய்ய 4 முதல் 6 மணி நேரம் ஆகும். இவற்றில் உள்ள அதிக நார்ச்சத்து காரணமாக இவ்வளவு தாமதமாக செரிமானம் செய்யப்படுகிறது. நார்ச்சத்து என்பது நம்முடைய செரிமான செயல்முறையை மெதுவாக்கி பசியை அதிகரிக்கும். 

புரோட்டீன்கள்

புரோட்டீன்கள் கார்போஹைட்ரேட்களுடன் ஒப்பிடும்பொழுது செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். புரோட்டீன் நிறைந்த உணவுகளை உடைப்பதற்கு அதிக நொதி செயல்பாடு தேவைப்படுகிறது. இதனால் செரிமான நேரம் அதிகமாகும். மீன் அல்லது சிக்கன் போன்ற மெலிந்த புரதங்களை செரிமானம் செய்ய 3 முதல் 4 மணி நேரங்கள் ஆகும். இதுவே காம்ப்ளக்ஸ் புரோட்டீன்கள் அதாவது சிவப்பு இறைச்சி, பீன்ஸ் வகைகள் போன்றவை 6 முதல் 8 மணி நேரம் நேரத்தில் செரிமானம் செய்யப்படும். 

கொழுப்புகள் 

இருப்பதிலேயே செரிமானம் ஆவதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்வது கொழுப்புகள். கொழுப்புகள் அதிகம் நிறைந்த சீஸ், நட்ஸ் மற்றும் பொரிக்கப்பட்ட உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கும். ஏனெனில் கொழுப்புகள் என்பது சிக்கலான மூலக்கூறுகள். இவற்றை உடைப்பதற்கு கல்லீரலில் இருந்து பைல் சாறு தேவைப்படுகிறது. கொழுப்பு வயிறு மற்றும் குடலுக்குள் நுழைவதற்கே 6 முதல் 8 மணி நேரம் ஆகும். 

பர்கர் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்கள் போன்ற அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் செரிமானம் ஆவதற்கு இருப்பதிலேயே அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இவை நம்முடைய செரிமான பாதையில் கிட்டத்தட்ட 12 மணி நேரம் இருக்குமாம் அல்லது அதில் உள்ள கொழுப்பு அளவைப் பொறுத்து இன்னும் கூடுதல் நேரம் கூட ஆகலாம். 

இதையும் படிக்கலாமே: உயிரை குடிக்கவும் அஞ்சாத அளவுக்கு அதிகமான கோபம்!!!

செரிமானத்திற்கான சராசரி நேரம் என்பது 28 மணி நேரம். ஜூஸ் வகைகள், சூப் போன்றவை போன்ற திரவங்கள் விரைவாக செரிமானம் ஆகக் கூடியவை. அதே நேரத்தில் நார்ச்சத்து புரோட்டீன் அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே உங்களுடைய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிடுங்கள். இவை உங்களை நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வோடு வைத்துக்கொள்ளும். 

அதே நேரத்தில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகளில் அடித்தளத்தில் இருப்பவை சர்க்கரை நிறைந்த பானங்கள், இனிப்புகள் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட உணவுகள். இவை உடல் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இவற்றில் எந்தவிதமான ஊட்டச்சத்துக்களும் கிடையாது. அத்துடன் நம்முடைய ரத்த சர்க்கரை அளவை தாறுமாறாக அதிகரிக்கலாம். மேலும் இவை காரணமாக நம்முடைய உடலில் வீக்கம் ஏற்படும். மறுபுறம் சிவப்பு இறைச்சி மற்றும் மீன் போன்றவை நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை விட செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும். எனவே சிவப்பு இறைச்சி அல்லது பொரிக்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடும் பொழுது அது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். 

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 130

    0

    0