மகன் இறந்த துக்கம்.. கோவையில் தலைமுறையே அழிந்த சோகம்!

Author: Hariharasudhan
5 November 2024, 5:45 pm

மகன் இறந்த துக்கம் தாளாத நிலையில் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மனைவி வக்தசலா. இந்த தம்பதிக்கு 7 வயதில் மகன் ஒருவர் இருந்தார். இவர்கள் குடும்பத்துடன் கோவை வேடம்பட்டி பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், இவர்கள் கடந்த நவம்பர் 2ஆம் தேதி, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர். பின்னர், நேற்று அறையைக் காலி செய்யச் சொல்வதற்காக ஹோட்டல் ஊழியர், பழனிச்சாமி தம்பதி தங்கியிருந்த கதவை தட்டிப் பார்த்து உள்ளார்.

ஆனால், கதவை யாரும் திறக்கவில்லை. பின்னர், மாற்று சாவியைக் கொண்டு வந்து அறையைத் திறந்து பார்த்து உள்ளனர். அப்போது, அவர்கள் வாயில் நுரை தள்ளியவாறு இருவரும் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

FAMILY

பின்னர், உடனடியாக இது குறித்து காட்டூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் குடிச்சுட்டு கும்மாளம் அடிச்ச பிரபல நடிகர்கள்… சம்பவம் செய்த விஜயகாந்த்!

அதேநேரம், இது தொடர்பாக உயிரிழந்த பழனிச்சாமியின் அண்ணன் முருகேசனிடம் தகவல் தெரிவித்தனர், பின்னர், இது தொடர்பான விசாரணையில், தம்பதியின் 7 வயது மகன் வைரஸ் காய்ச்சல் வந்து உயிரிழந்து உள்ளார். இதனால் தம்பதி இருவரும் மனமுடைந்து இருந்தது தெரிய வந்தது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த கோவை காட்டூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Dhanush Upcoming Project Dropped தனுஷ்க்கு இது சோதனை காலம்… முக்கிய படத்தை கைவிட முடிவு?!
  • Views: - 129

    0

    0