கடன் வாங்கி நடித்த அமரன் பட நடிகர் : திருப்புமுனையால் அடித்த ஜாக்பாட்!!

Author: Selvan
6 November 2024, 2:00 pm

அமரன் படத்தில் கடன் வாங்கி நடித்ததாக அப்படத்தில் நடித்த பிரபலம் தனது சோகக் கதையை பகிர்ந்துள்ளார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த நடிகர் லல்லு தன்னுடைய சொந்த செலவிற்கும் காஷ்மீரில் தங்கி பணிபுரியவும் லோன் போட்டு அமரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்க: விஜய்யை காலி செய்த சிவகார்த்திகேயன்… கோட் படத்தை முந்திய அமரன்!

எல்லாரும் லோன் போட்டு படிக்கதான் போவாங்க.. ஆனா நான் லோன் போட்டு அமரன் படத்துல நடிச்சேன்.. சினிமாவுல இருக்கும் போது பணம் வராது, சரியான பொருளாதார நிலையும் இருக்காது.

பழைய மாதிரி படங்கள்ல நடிக்கணும், டான்ஸ் பண்ணனும், காமெடி பண்ணனும்னு ஆசைகள் இருக்கு. இந்த மாதிரியான கதாபாத்திரங்கள் மட்டும் பண்ணலாம்னு நினைப்போம். இங்க சர்வைவல்னு ஒரு விஷயம் இருக்கு. நிதர்சன வடிவம் என்னதுனு நமக்கு தெரியும். இதுக்கு முன்னாடி பண்ணின படங்கள் மூலமாக ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.

அப்படிt `அமரன்’ படத்துக்குள்ள போனேன். இன்னைக்கு என்னுடைய கரியரைத் திரும்பவும் இந்த படம் தொடங்கி வச்சிருக்கு என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?