வின்டர் சீசன்ல இந்த மாதிரி ஃபேஸ் பேக் போட்டா தான் சரியா இருக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
6 November 2024, 1:31 pm

ஒரு வழியாக தீபாவளி முடிந்து விட்டது. பல்வேறு விதமான எண்ணெய் பலகாரம் மற்றும் இனிப்புகளை சாப்பிட்டதால் நம்முடைய சருமத்தில் முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அது மட்டும் அல்லாமல் இந்த கடுமையான வானிலையின் காரணமாகவும் சருமம் பொலிவிழந்து காணப்படலாம். எனவே வின்டர் சீசனுக்கு ஏற்றபடி உங்கள் சருமத்தை தயார் செய்வதற்கு உதவும் சில ஃபேஸ் பேக்குகளை பார்க்கலாம். 

பளபளப்பான சருமத்திற்கு நலங்கு மாவு ஃபேஸ் பேக்

இது பாரம்பரிய ஸ்க்ரப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்திற்கு பொலிவை தருகிறது. இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு கொரகொரப்பாக அரைத்த கடலை மாவுடன் 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 கப் சந்தன பொடி, 1/4 கப் தனியா பொடி, 1/4 கப் சிவப்பு சந்தன பொடி, 1/4 டேபிள் ஸ்பூன் பாலாடை மற்றும் பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி முகத்திற்கு மாய்சரைசர் பயன்படுத்துங்கள். இவ்வாறு செய்வது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்களுக்கு இளமையான சருமத்தை தரும். இந்த பொடியை நீங்கள் ஏர் டைட் கண்டைனரில் சேமித்து வைத்து வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம். 

இதையும் படிக்கலாமே: பாலை காய்ச்சாமல் குடித்தால் உடல்நலனுக்கு பிரச்சினை வருமா…???

மினுமினுப்பான சருமத்திற்கான ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தில் கிட்டதட்ட மினி ஸ்பா சிகிச்சை போல செயல்படும். இதனை செய்வதற்கு 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி, 1/2 டேபிள் ஸ்பூன் தனியா பொடி, 1/2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் அதிமதுரம், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பால் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். பிறகு முகம் மற்றும் கழுத்து பகுதியில் இந்த பேஸ்டை தடவி முழுவதுமாக காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவவும். 

கற்றாழை ஃபேஸ் பேக்

ஃபிரஷான கற்றாழை சாற்றை எடுத்து அதனோடு சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் ஐஸ் தண்ணீர் சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இது உங்கள் சருமத்திற்கு தேவையான போஷாக்கை கொடுப்பதற்கு உதவும். 

குளிர் காலத்தில் மினுமினுப்பான சருமத்தை பெறுவதற்கு இந்த ஃபேஸ் பேக்குகள் உங்களுக்கு உதவும்.

  • ajith fans criticize ilaiyaraaja in strong words for giving notice to good bad ugly “இளையராஜா ஒரு பண பைத்தியம்”… தானாக ஆஜர் ஆகி அடிவாங்கும் அஜித் ரசிகர்கள்! ஏன் இப்படி?