விசிக மீது கடும் விமர்சனம்.. கொலை மிரட்டல் விவகாரத்தில் ராமதாஸ் காட்டம்

Author: Hariharasudhan
6 November 2024, 3:16 pm

மஞ்சக்கொல்லையில் பாமக பிரமுகர் மீதான தாக்குதல், வன்னியர் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் ஆகியவற்றிற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்: இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர், சில நாட்களுக்கு முன்பு தமது சகோதரியின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுத்து விட்டு, பு.உடையூர் என்ற கிராமத்தின் வழியாக சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் வழியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.

வழியை விட்டு ஒதுங்கி நின்று மது அருந்தும்படி செல்லத்துரை கூறியதால் ஆத்திரம் அடைந்த 15க்கும் மேற்பட்டோர் அடங்கிய அந்த கும்பல், கட்டைகளாலும், மதுபாட்டில்களாலும் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அந்த கும்பலின் கொலைவெறித் தாக்குதலில் தலை, முகம், உடல் என அனைத்து இடங்களிலும் காயமடைந்து, ரத்தம் வழியும் நிலையில் செல்லத்துரை மயங்கி விழுந்துள்ளார்.அப்போதும் கொலைவெறி அடங்காத கும்பல், அவரை கால்களால் எட்டி உதைத்தும், அவரது சட்டையில் உள்ள வன்னியர் சாதி சின்னத்தை மிதித்தும், அவதூறாக பேசியும் இழிவுபடுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்த மனிதநேயமும், பண்பாடும் இல்லாத இந்த நிகழ்வுகளை தங்களின் சாதனைகளாக காட்டிக்கொள்ளும் நோக்குடன் காணொலியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அரக்கமனம் படைத்தவர்களால் மட்டுமே இவ்வளவு கொடூரமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் நடந்துகொள்ளமுடியும்.இவ்வாறு வன்முறை கும்பலால் கொடூரமாக கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கொக்கரித்துள்ளனர்.

People Protest

கடலூர் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கொலைமிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்து உள்ளார். முன்னதாக, வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், பாமக வேலூர் கிழக்கு மாவட்டம் மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் பி.கே.வெங்கடேசன் தலைமையில் பாமகவினர் ஊர்வலமாக வந்தனர்.

இதையும் படிங்க: மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாட சொல்வீர்களா? திமுகவை அலறவிட்ட கம்யூ., எம்பி!

பின்னர், “கடலூர் மாவட்டத்தில் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் சாதி வெறியர்கள் சிலர் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினரை இழிவாக பேசி கொலைமிரட்டல் விடுத்தனர். எனவே, இவ்வாறு செயல்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவானணிடம் மனு அளித்தனர்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!