செவிலியருடன் அடிக்கடி செ***ஸ்.. பலமுறை கருக்கலைப்பு : சென்னையை உலுக்கிய டாக்டர்!
Author: Udayachandran RadhaKrishnan6 November 2024, 5:10 pm
தனது இச்சைக்கு செவிலியரை பயன்படுத்தி அடிக்கடி அனுபவித்த மருத்துவரின் உண்மை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ளது பில்ரோத் மருத்துவமனை. இங்கு கவுதம் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவர் அங்கு பணிபுரிந்து ஒரு செவிலியரிடம் அளவுக்கு மீறி பழகி வந்துள்ளார். பின்னர் அந்த செவிலியரை காதலிப்பதாக கூறி அடிக்கடி தனிமையில் சந்தித்து தனது இச்சைகளை தீர்த்துள்ளார்.
பல முறை கர்ப்பமான அந்த செவிலியர் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். பிறகு செய்து கொள்கிறேன் என கூறி கருக்கலைப்பும் செய்துள்ளார்.
ஒரு முறை அல்ல பலமுறை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து திருமங்கலம் காவல் நிலையத்தில் அந்த செவிலியர் புகார் அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அந்த செவிலியர் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் மருத்துவர் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்ததாகவும் புகார் கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: குளித்துக் கொண்டிருந்த பெண்.. சுவரை துளையிட்டு வீடியோ எடுத்த எலக்ட்ரீசியன் : அதிர்ச்சி சம்பவம்!
தனது தாயிடம் உன்னை அறிமுகப்படுத்த வேண்டும் என அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததகாவும், பல முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து மருத்துவர் கவுதமை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.