வெள்ளை சர்க்கரை நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு எத்தனை பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம். வெள்ளை சர்க்கரையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பலர் வெல்லத்தைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இந்த வெல்லமானது உங்களுடைய உணவுகளுக்கு இனிப்பு சுவை சேர்ப்பது மற்றும் உடல் எடையை கட்டுக்குள் வைப்பது மட்டுமல்லாமல் உங்கள் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த வெல்லம் ரத்த அழுத்தத்தை சீராக பராமரித்து, கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இந்த பதிவில் வெல்லத்தை பயன்படுத்துவதால் இதயத்திற்கு கிடைக்கும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஆன்டி-ஆக்சிடன்ட்கள்
வெல்லத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஏற்படுவதை தடுத்து, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் காரணமாக இதயத்திற்கு சேதம் ஏற்படுவதை தடுக்கிறது. இதனால் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
அத்தியாவசிய மினரல்கள்
பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற மினரல்கள் வெல்லத்தில் காணப்படுகிறது. சோடியம் அளவை சமநிலைப்படுத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் இதயத்திற்கு அதிக அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. அதே நேரத்தில் மெக்னீசியம் ரத்த நாளங்களை ஓய்வடைய செய்து இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது.
ரத்த ஓட்டம்
வெல்லம் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கு உதவுகிறது. இதனால் ரத்தம் உறைதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. அதிக ரத்த ஓட்டம் இதயத் திசுக்களுக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் வெல்லத்தை சாப்பிடுவது பொட்டாசியம் உட்கொள்ளலை அதிகரித்து நம்முடைய ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
இதையும் படிக்கலாமே: வின்டர் சீசன்ல இந்த மாதிரி ஃபேஸ் பேக் போட்டா தான் சரியா இருக்கும்!!!
வீக்கம்
வெல்லத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் பிற காம்பவுண்டுகள் வீக்க எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இது ரத்த நாளங்களில் நாள்பட்ட வீக்கம் ஏற்படுவதை குறைக்கிறது. ஏனெனில் இது இதய நோய் ஏற்படுவதற்கான ஒரு முக்கியமான காரணியாக அமைகிறது.
கெட்ட கொலஸ்ட்ரால்
LDL கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் நம்முடைய இதயம் ஆரோக்கியத்தில் ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளது. இதனால் தமனிகளில் பிளேக் படிந்து அதிரோஸ்க்லீரோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது தமனிகளை குறுக செய்து, ரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதனால் ரத்த உரைதல் மற்றும் ஹார்ட் அட்டாக் ஏற்படலாம்.
வெல்லம் மூலமாக நமக்கு இத்தனை பயன்கள் கிடைத்தாலும் வெல்லத்தை நாம் மிதமான அளவு சாப்பிடுவது அவசியம். அதாவது ஒரு நாளைக்கு 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிடுவது பாதுகாப்பான அளவாக கருதப்படுகிறது. ஏனெனில் வெல்லத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிக்கலாம். இதனால் இதயத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.