வறண்ட தோலுக்கு இனி காஸ்ட்லி லோஷன் எல்லாம் வேண்டாம்… தேங்காய் எண்ணெய் ஒன்னு போதும்!!!

Author: Hemalatha Ramkumar
7 November 2024, 10:37 am

பெரும்பாலான நபர்களுக்கு குளிர்காலத்தில் சருமம் வறண்டு காணப்படும். எனவே சருமத்தை மாய்சரைஸ் செய்வதற்காக பலர் லோஷன்களை அடிக்கடி தடவிக் கொண்டே இருப்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஒருவேளை குளிர் காலத்தில் உங்களுக்கும் இந்த மாதிரி மாதிரியான வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமம் இருந்தால் உங்களுக்கான சிறந்த தீர்வு இந்த பதிவில் உள்ளது. 

வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. வரண்ட சருமத்தை சரி செய்து மினுமினுப்பான, பொலிவான சருமத்தை பெறுவதற்கு தேங்காய் எண்ணெயுடன் எந்தெந்த பொருளை பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேங்காய் எண்ணெய் என்பது நம்முடைய சருமத்தை பராமரிக்க உதவும் ஒரு இயற்கை பொருளாக அமைகிறது. இதில் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் நமது சருமத்திற்கு தேவையான போஷாக்கை வழங்கி சருமத்தை ஆரோக்கியமாக மாற்றுகிறது. 

குளிர்காலத்தில் நீங்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தும் பொழுது அது உங்கள் சருமத்தை நீண்ட நேரத்திற்கு ஈரப்பதத்தோடு வைக்கிறது. உங்களுடைய இரவு நேர சரும பராமரிப்பு வழக்கத்தில் தேங்காய் எண்ணெயில் சேர்த்த வந்தால் காலை எழும்பொழுது மென்மையான அதே நேரத்தில் மினுமினுப்பான சருமத்தை பெறலாம். இப்போது தேங்காய் எண்ணெயை சருமத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம். 

கிளிசரின் மற்றும் தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெயில் கிளிசரின் கலந்து உங்கள் சருமத்தில் தடவுங்கள். இது வறண்ட சருமம் கொண்ட நபர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் கிளிசரின் ஆகிய இரண்டுமே சருமத்தில் உள்ள வறட்சியைப் போக்கி அதற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. தேங்காய் எண்ணெயில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளதால் இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, அதனை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதே நேரத்தில் கிளிசரனை உங்களுடைய தலைமுடி பராமரிப்பிலும் பயன்படுத்தலாம். இந்த கலவையை தலைமுடியில் தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து பின்னர் காலையில் தலைமுடியை வழக்கம் போல அலச வேண்டும். 

இதையும் படிக்கலாமே: இதயத்தை பலமாக்கும் வெல்லம்!!! 

இரவு நேர சரும பராமரிப்பில் எக்ஸ்ஃபோலியேஷன்

வறண்ட சருமத்தை போக்குவதற்கு உங்களுடைய இரவு நேர சரும பராமரிப்பில் இந்த விஷயத்தை நீங்கள் கட்டாயமாக சேர்க்க வேண்டும். அதாவது உங்கள் சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்து அதில் உள்ள இறந்த செல்களை அகற்ற வேண்டும். இதற்கு நீங்கள் காபி பொடி மற்றும் சிறிதளவு கடலை மாவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம். இது இறந்த சரும செல்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும். 

கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய்

கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் எண்ணெயை கலந்து பயன்படுத்துவது உங்கள் சருமத்தில் பல அதிசயங்களை செய்யும்  இந்த இரண்டு பொருட்களுமே உங்கள் சருமத்தில் சிறந்த முறையில் செயல்படும். கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி அதில் உள்ள வறட்சியை போக்குகிறது. கற்றாழை ஜெல்லில் வைட்டமின் A இருப்பதால் இது சேதமடைந்த சருமத்தை சரி செய்கிறது. மேலும் அதில் உள்ள வைட்டமின் C ஆன்டி-ஆக்சிடன்ட் ஆக செயல்பட்டு சருமத்தை பளபளக்க செய்கிறது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 187

    0

    0