விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்திலிருந்து மக்களின் பெருவாரியான வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதிலிருந்து விலகியதை அடுத்து இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
காரணம் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக நியமிக்கப்பட்டது தான். பிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் சண்டை , போட்டி, பொறாமை, கலாட்டா , பிரச்சனை என சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது .
இந்த 8வது சீசனில் இருந்து இதுவரை ரவீந்தர் , அர்னவ், தர்ஷா குப்தா , ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்கள்து வாழ்க்கையில் நடந்த மிக மோசமான அனுபவங்களை குறித்து மனம் விட்டு பேசினார்கள்.
அப்போது பேசிய சத்யாவின் கதை கேட்டு எல்லோருக்குமே கண்கலங்கி விட்டார்கள். காரணம் சத்யாவின் கதை அவ்வளவு சோகம் நிறைந்ததாக இருந்தது .
அவர் கூறிய அவர் கூறியதாவது, நான் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பையன் தான். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய பெற்றோர் ஒருவரை ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
அடுத்து நான் என்னுடைய பாட்டி வீட்டில் வளர்ந்தேன். ஆனால் என்னுடைய பாட்டிக்கு வயது ஆனதால் என்னை அவரால் பார்த்துக் கொள்ள முடியவில்லை.
எனவே என்னை போரிங் ஸ்கூலில் சேர்த்தார்கள். அங்கு ஒரு பெண் மீது காதல் விழுந்தேன். அந்த அந்த காதல் கல்லூரி சென்ற போதும் தொடர்ந்தது.
கல்லூரி சென்ற போதும் தொடர்ந்தது அந்த பெண் வீட்டில் விஷயம் தெரிய வர அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள் .
அப்போது திடீரென ஒரு போன் கால் எனக்கு வந்தது. நான் எதிர்பார்க்காத போன் கால் அது…அவள் இறந்துவிட்டால் என்று எனக்கு சொன்னார்கள்.
என்னுடைய முதல் காதலி என்னிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் ஒரு இடத்திற்கு சென்றால். ஆனால், அங்கு அவருக்கு நடந்ததோ துரதிஷ்டமான சம்பவம்.
அவளை சில பேர் பாலியல் பலாத்காரம் செய்து ஒரு ரயில்வே டிராக்கல் தூக்கிப் போட்டு விட்டார்கள். அந்த பிரிவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அதிலிருந்து என்னால் வெளியில் வரவும் முடியவில்லை. என் காதலியை நினைத்து நினைத்து நான் கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு தற்கொலை முயற்சி செய்திருக்கிறேன்.
அது எவ்வளவு பெரிய கோழைத்தனம் என்று பின்னால் தான் எனக்கு தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் பெற்றோர்கள் காதலி என எல்லோருமே என்னை விட்டு பிரிந்து சென்றதால் என்னால் அதிலிருந்து எப்படி வெளியில் வந்து வாழ்வது என்று கேள்வியே மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.
அதனால் நான் போதைக்கு அடிமையாகி இருந்தேன். அப்போது தான் எனக்கு சினிமா மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது .
அதன் பிறகு எனக்கு இன்னொரு காதல் வந்தது. அவர்தான் என் மனைவி ரம்யா. மேலும் பேசிய அவர் பெற்றோர்கள் சாதாரணமாக ஒருவரை ஒருவர் மனக்கசப்பு என கூறி பிரிந்து விட்டுப் போய் விடலாம் .
ஆனால் அவர்களின் குழந்தையின் மனநிலை பற்றி தயவு செய்து கொஞ்சம் ஆவது யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என சத்யா மிகுந்த வருத்தத்தோடு அந்த பேட்டியில் பேசி இருந்தார்.
சத்யாவின் மனைவியான ரம்யா முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தது குறிப்பிடுத்தக்கது.
சத்யாவின் இந்த சோக கதை ஒட்டுமொத்த மக்களையும் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
0
0