காதலியை கரம் பிடித்தார் பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி – அதுல ட்விஸ்ட் என்ன தெரியுமா?

Author:
7 November 2024, 4:18 pm

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் பிரதீப் ஆண்டனி. இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் பிரதீப் ஆண்டனி தனது நீண்ட நாள் காதலி பூஜா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது பிக்பாஸுக்கு முன்னதாக பிரதீப் ஆண்டனி அருவி மற்றும் வாழ் போன்ற சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

pradeep antony

இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால், வீட்டில் இவர் மீது இருந்த பெண்கள் இவரின் கேரக்டர் சரியில்லை. பெண்களை தவறான பார்வையில் பார்க்கிறார் என்றெல்லாம் அவர் மீது அபாண்டமாக பழி போட்டு ரெக்கார்ட் கொடுத்து அவரை வெளியேற்றி விட்டார்கள் .

இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீப் ஆண்டனி ஆதரவாளர்கள் கமல்ஹாசன் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டதாக கூறி கமல்ஹாசனுக்கு கடுமையான கண்டனங்கள் எழுப்பினார்கள். ஒரு கட்டத்தில் கமல்ஹாசனுக்கு அது மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது .

பிரதீப் ஆன்டனியால் தான் தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை கூட கமல்ஹாசன் தொகுத்து வழங்காமல் அதிலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்தார் என்றெல்லாம் பேசப்பட்டது . இப்படியான சமயத்தில் பிரதீப் ஆண்டனி தனது நீண்ட நாள் காதலியான பூஜா என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டிருக்கிறார் .

அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் நடந்திருக்கும் ஒரு ட்விஸ்ட் என்னவென்று கேட்டீர்களானால் இதே நவம்பர் மாதம் 10ஆம் தேதி அதாவது நவம்பர் முதல் வாரத்தில் தான் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்து பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் .

தற்போது அதே வாரத்தில் அதுவும் கமல்ஹாசனின் பிறந்தநாளிலே பிரதீப் ஆண்டனி தனது காதலியை கரம் பிடித்திருக்கிறார். இது எதேர்ச்சியாக நடந்ததா? அல்லது அவர் பிளான் பண்ணி செய்தாரா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை பலரும் குவித்து வருகிறார்கள். இந்த திருமணத்தில் சுரேஷ் தாத்தா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 115

    0

    0