டயாபடீஸ் இருக்கவங்க கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்தா கூட இரத்த புற்றுநோய் வர சான்ஸ் இருக்கு!!!
Author: Hemalatha Ramkumar7 November 2024, 7:34 pm
டயாபடீஸ் இருப்பவர்களுக்கு அதிலும் குறிப்பாக வகை 2 டயாபடீஸ் இருப்பவர்களுக்கு இதயம் அல்லது சிறுநீரக நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது மட்டுமல்ல டயாபடீஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு ஒரு சில வகையான புற்றுநோய்கள் ஏற்படலாம் என்று ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்லீரல் புற்றுநோய், கோலோரெக்டல் புற்றுநோய், கணைய புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவை ஏற்படலாம். தற்போது டயாபடீஸ் மற்றும் ரத்த புற்றுநோய் இடையே உள்ள தொடர்பு சம்பந்தமான ஆய்வு முடிவுகள் வெளியாகி வருகிறது.
டயாபடீஸ் மற்றும் ரத்த புற்றுநோய் எவ்வாறு ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புடையவையாக அமைகின்றன என்பதை பார்க்கலாம். இன்றைய உலகில் டயாபடீஸ் மற்றும் புற்றுநோய் ஆகிய இரண்டுமே நம்முடைய ஆரோக்கியத்திற்கு சவால்களை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. இந்தியாவில் மட்டும் 74 மில்லியன் நபர்கள் டயாபடீஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் உலக அளவில் இந்தியா புற்றுநோய் ரத்த புற்றுநோய் நோயாளிகளின் வரிசையில் மூன்றாவது இடத்தை கொண்டுள்ளது. தற்போது இந்த இரண்டிற்கும் இடையே தொடர்பு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிக குளுக்கோஸ் அளவுகள் அதாவது டயாபடீஸின் முக்கிய காரணமாக அமையும் அதிக குளுக்கோஸ் அளவுகள் கேன்சர் செல்கள் உருவாவதற்கான ஒரு சாதகமான சூழலை உருவாக்குகிறது. மேலும் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமாக இருப்பது கேன்சர் வளர்ச்சியை தூண்டி, வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் புற்றுநோய் உண்டவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அதிக சர்க்கரை அளவுகள் காரணமாக ஏற்படும் நாள்பட்ட வீக்கம் பல்வேறு விதமான ரத்த புற்று நோய்களை ஏற்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: எப்போதும் ஆக்டிவா இருக்கணும் சொல்றாங்களே அந்த மாதிரி இருக்க ஏதாவது டிப்ஸ் இருக்கா…???
மேலும் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு அதன் மூலமாக புற்றுநோய் வரலாம். உடலில் அதிகப்படியான கொழுப்பு இருப்பதால் வளர்ச்சி காரணிகள் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வீக்க ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. இவை அனைத்துமே சேர்ந்து புற்றுநோய் செல் வளர்ச்சியை அதிகரித்து அதனால் புற்றுநோய் ரத்தத்தில் பரவுகிறது. டயாபடீஸ் இருப்பவர்களுக்கு ரத்த புற்று நோய் ஏற்படுவதற்கான மற்றொரு முக்கியமான காரணம் இன்சுலின் எதிர்ப்பு திறன். இது பொதுவாக நீரழிவு நோய் காரணமாக ஏற்படுகிறது. அதிக இன்சுலின் அளவுகள் புற்றுநோய் செல் வளர்ச்சியை அதிகரிக்கிறது. எனவே டயாபடீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நீரிழிவு நோய் காரணமாக ரத்த புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்க உதவும் குறிப்புகள்
*டயாபடீஸ் நோயை வழக்கமான முறையில் நீங்கள் கண்காணிக்க வேண்டும்.
*மேலும் புற்றுநோய் அறிகுறிகளை தெரிந்து கொண்டு அது குறித்து விழிப்போடு இருக்க வேண்டும்.
*நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு உங்களுடைய ரத்த சர்க்கரை அளவுகளை சீராக பராமரிப்பது அவசியம்.
*உடற்பருமன் காரணமாக ஏற்படும் புற்றுநோயை தடுப்பதற்கு உடல் எடையை சரியாக பராமரிப்பது அவசியம்.