அப்பாவோட கட்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.. புயலை கிளப்பிய விஜய் மகன்!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2024, 1:59 pm

அப்பாவின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என விஜய் மகன் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது மட்டுமல்லாமல், மாநாட்டை பற்றி எதிர்க்கட்சிகளையும் பேச வைத்துவிட்டார்.

மாநாட்டுக்கு கூடிய இளைஞர்களின் கூட்டத்தை பார்த்து எதிர்கட்சிகள் மிரண்டு போனது மட்டுமல்லாமல், விஜய் சொன்ன கட்சிக் கொள்கை, கோட்பாட்டை பற்றி தினமும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: தனுஷ்க்கு திருப்பி கொடுத்த SK.. மீண்டும் இணையும் கூட்டணி : வெளியான மாஸ் அப்டேட்!

விஜய் தனது கடைசி படத்தை அறிவித்தாலும், பெரும்பாலும் அரசியல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றார். சமீபத்தில் கூட தவெக ஆலோசனை கூட்டத்தை கூட்டி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்.

Vijay Son Jason Sanjay

வாரிசு அரசியல் பற்றி பேசி திமுகவை அலற விட்டுள்ளார். இந்த நிலையில் தனது குடும்பத்தினரை கட்சிக்குள் நெருங்க விடாமல் பார்த்து வருகிறார்.

Vijay Family

இது குறித்து பேசிய அவரது தாய் ஷோபா சந்திரசேகர், விஜய் கட்சி தொடங்கியது குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லைதான். விஜய்யோட பிள்ளைகளும் கட்சி பற்றி பேசவே மாட்டார்கள். கட்சிக்கு தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஜேசன் சஞ்சய் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

Director Jason Sanjay

மகன் சஞ்சய் சினிமா இயக்குராக அவதாரம் எடுத்துள்ளார். அதே போல மகள் திவ்யா சாஷா படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற சஞ்சய்யின் ஆசையும் நிறைவேறாமல் போனது குறிப்பிடத்தக்கது.

  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 205

    0

    0