படப்பிடிப்பில் விபத்து : பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி…ஷாக் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan8 November 2024, 6:40 pm
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் பிரபல நடிகர் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.
விஜய் தேவரகொண்டா நடித்து வரும் படங்கள் சமீப காலமாக தோல்வியை சந்தித்து வருகிறது. அடுத்த படம் நிச்சயம் ஹிட் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் Gautam Tunnauri இயக்கத்தில் தனது 12வது படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்க: சமந்தா கேரியருக்கு END CARD… முத்தக் காட்சியால் மொத்தமும் CLOSE..!!
2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
படப்பிடிப்பு சமயத்தில் விஜய் தேவரகொண்டா மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். மாடிப் படிக்கட்டில் தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#VijayDevarakonda slips and falls down. #VD12 pic.twitter.com/649XY8HCyu
— Parthiban A (@ParthibanAPN) November 8, 2024
இது தொடர்பான பதற வைக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. லேசான காயம் தான் என்றும், அவர் தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.