கோட் பட துப்பாக்கி காட்சி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், விஜய் இடத்தை யாரும் எடுத்துக் கொள்ள முடியாது என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அவர் சினிமாவுக்கு வேண்டுமானால் கஷ்டப்படாமல் வந்திருக்கலாம், இருப்பிடம், உணவு ஆகியவை அவருக்கு கிடைத்திருக்கலாம். ஆனால், சினிமாவில் அவர் கஷ்டப்பட்டு தான் வந்தார் ‘ நடிகர் கருணாஸ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு சொல்லி இருப்பார். ஆம், உருவகேலி, தொடர் தோல்வி என பல இடர்பாடுகளைக் கடந்து தான் இளைய தளபதி, தளபதி, தற்போது தலைவர் என்ற பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அவரது ஊதியம் 200 கோடி ரூபாய் என அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியே ஊடகம் முன்பு ஒப்புக் கொண்டார்.
அதேநேரம், இதன் பிறகு எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள தளபதி 69 படத்தில் விஜய் ஊதியம் 275 கோடி ரூபாய் என்ற அளவில் பேசப்படுகிறது. இதனிடையே, ‘ துப்பாக்கியை பிடிங்க சிவா ‘ என விஜய் கூறியதும், ‘ உங்களுக்கு இதைவிட முக்கியமான வேலை இருக்குனு நினைக்கிறேன். இத நான் பாத்துக்கிறேன் ‘ என சிவகார்த்திகேயன் கூற, விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது கோட் பட தியேட்டர்களில். இப்படி அரசியலுக்கு பயணம் செய்யும் ஒரு முன்னணி பாக்ஸ் ஆபிஸ் நடிகர், சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்துச் சென்றார், அப்படியெனில் விஜயின் இடத்திற்கு சிவகார்த்திகேயன் வருகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த அலை ஓய்வதற்குள், அமரன் திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் 200 கோடி ரூபாய் கிளப்பிலும் எஸ்கே இணைய உள்ளார். இப்படியான மதிப்பு சிவகார்த்திகேயனை உச்ச முன்னணி நட்சத்திரமாக மாற்றியுள்ளது.
இந்த நிலையில், ஒரு இணைய ஊடகத்திற்கு சிவகார்த்திகேயன் பேட்டி அளித்துள்ளார். அதிக அவரிடம், அடுத்த விஜய், விஜய் இடத்தை நிரப்ப உள்ளதாக யூகிக்கப்படுகிறதே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ” விஜய் சார் இடத்தை யாராலும் அவரிடம் இருந்து எடுத்துக் கொள்ள முடியாது. 30 வருடங்களுக்கு மேல் கடினமாக உழைத்து அந்த இடத்தை அவர் உருவாக்கியுள்ளார். நேற்று வந்த நான் எப்போதும் அதனை எடுத்துக் கொள்ள முடியாது.
இதையும் படிங்க : விஜய் டிவி தொகுப்பாளருக்கு நடந்த பாலியல் தொல்லை …தூக்கில் தொங்கிய அப்பா…!பிக்பாஸில் நடந்தது என்ன ?
‘The GOAT’ படத்தின் அந்த காட்சி அழகானது. ஒரு பெரிய ஸ்டார் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர் உடன் திரையைப் பகிர்ந்து கொள்வதாகவே அதனை நான் பார்க்கிறேன். 12 வருடங்களுக்கு முன்பு ‘துப்பாக்கி’ படத்தைப் பற்றி ட்வீட் செய்த நான், அவருடன் நடித்தது மிகவும் ஸ்பெஷலான உணர்வு” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.