4 பெஸ்டி போதுமா.. கொஞ்சம் குத்து விளக்கு தான்.. இவரா ‘அவர்’

Author: Hariharasudhan
8 November 2024, 7:51 pm

சீரியலில் குத்து விளக்காக நடித்து வரும் நடிகை ஒருவர், வார இறுதியில் தனது பெஸ்டிகளுடன் சேர்ந்து பப்களில் முக்கிய புள்ளிகளுக்கு ஸ்கெட்ச் போடுகிராறாம்.

சென்னை: எப்பொழுதுமே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வருவது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு விஷயம். இதற்காக சின்னத்திரையில் இருக்கும் பலரும் தங்களது உழைப்பை மெருகேற்றி, அதனை வெள்ளித்திரைக்கு கொண்டு வர முயற்சி செய்வர். இதில் சிலர், தங்களது உடலைக் காட்டியும், கவர்ச்சியை மெருகேற்றியும் வெள்ளித் திரைக்கு தங்களது வரவேற்பை அளிப்பர்.

அந்த வகையில், பிரபல டிவி சேனலில் பிரைம் சீரியலாக ஓடிவரும் ஒரு தொலைக்காட்சி தொடரில், நடிகை ஒருவர் நடித்து வருகிறார். இவர் அந்த சீரியலில் போர்த்திக் கொண்டு, குடும்ப குத்து விளக்காகவே வலம் வருவார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் சமூக வலைத்தளங்களில் உண்டு. இந்த நிலையில், சீரியலில் குடும்ப குத்து விளக்காக ஜொலித்து வரும் இவர், வார இறுதியில் சீரியல் லைட் செட்டுகளுக்கு மத்தியில் மாடர்ன் டிரஸ் உடன் நடனம் ஆடி வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு வார இறுதியும் தனியார் பார் மற்றும் பப்புகளுக்குச் சென்று, அங்குள்ள ஆண் மற்றும் பெண்களுடன் கிளாமர் நடனம் ஆடி வருகிறார். அது மட்டும் அல்லாமல், இதற்காக தொகை தேவைப்படும் என்பதால், இந்த மாடர்ன் கவர்ச்சி நடனத்திற்காகவே, நான்கு பெஸ்டிகளை கையில் வைத்துள்ளாராம், இந்த முக்கிய நடிகை.

இந்த விஷயம், ஏன் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது எனக் கேட்டால், அந்த பெஸ்டிகளில் ஒருவரின் நண்பர் மூலமே இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன்படி பார்த்தால், இந்த முக்கிய சீரியல் நடிகை, தனது 4 பெஸ்டிகள் உடன் சேர்ந்து மது அருந்திவிட்டு, நன்றாக கிளாமர் டான்ஸ் ஆடி விட்டு வீட்டிற்குச் செல்ல முயன்றுள்ளார். அப்போது யார் அந்த முக்கிய அழகு நடிகையை இறக்கி விடுவது என்பதில் நான்கு பெஸ்டிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் ஒருவழியாக இந்த பிரச்னையைத் தீர்த்த அந்த நடிகையை, ஒருவர் அவரது வீட்டில் இறக்கி விட்டுள்ளார். இந்த விஷயத்தை அந்த பாய் பெஸ்டிகளில் ஒருவர் தனது நண்பருக்கு கூற, அந்த நண்பர் மூலம் கட்டுமேனி நடிகருக்கு விஷயம் கசிந்துள்ளது. இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட, உச்சகட்ட காண்டில் உள்ளாராம் அந்த நடிகை. எது எப்படியோ, வார இறுதிக்கு பப்புகளுக்குச் சென்று கிளாமர் நடனமாடி, முக்கியப் புள்ளிகளை கைக்குள் போடுவது என்பதே அவரின் கணக்கு எனவும் காதோரம் தகவல் கசிந்துள்ளது.

இதையும் படிங்க : விஜய் இடத்தை எடுத்துக்க முடியுமா? எஸ்கேப் ஆன எஸ்கே!

  • S. J. Surya director comeback மீண்டும் இயக்குனராகும் பிரபல நடிகர் :10 வருட இடைவெளிக்கு பிறகு எடுத்த திடீர் முடிவு…!
  • Views: - 404

    0

    0