சூப்பர் ஸ்டார் ரஜினியை கழுவி ஊத்திய சீரியல் நடிகர்..! பாபா திரைப்படத்தில் என்ன நடந்தது?

Author: Selvan
9 November 2024, 2:01 pm

என்ன தலைவரே கடைசியில் நீங்களே இப்படி பண்ணிடீங்க ..ரஜினி நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாபா.

இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, சங்கவி, கருணாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை. ரஜினிகாந்தே இப்படத்தை தயாரித்திருந்தார்.

poovilangu mohan talk about rajini


இந்நிலையில் பாபா படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்த பூவிலங்கு மோகன் ரஜினி பற்றி பகிர்ந்துள்ள சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “பாபா ஷூட்டிங்கில் நான் நடித்தபோது ரஜினி என்னை பக்கத்தில் உட்கார வைத்து ‘சீரியல்ல எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க’ என்று கேட்டார்.

நான் ஒரு நாளைக்கு 3000 ரூபாய் என்றேன். ‘ரொம்ப கஷ்டம்ல‘ என்று வருத்தப்பட்டு பேசினார். சில நாட்களுக்கு அப்புறம் பாபா படத்துக்கான சம்பளம் எனக்கு வந்தது. ஒரு நாளைக்கு 3000 ரூபாய் கொடுத்திருந்தார் ரஜினி சார்.

baba movie failure

சீரியலில் அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை கேட்டு தெரிந்துகொண்டு அதே அளவு சம்பளத்தையே பாபாவுக்கும் அவர் கொடுத்தார் . வழக்கமாக சீரியலை விட சினிமாவில் அதிக சம்பளம் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் .

ஆனால் ரஜினி அதற்கு எதிர்மறையாக செய்தார் என அந்த பேட்டியில் சொல்லி இருப்பார் பூவிலங்கு மோகன்.

இதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என ரசிர்கர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 155

    0

    0