இன்று ஆறுதல் பரிசு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Author: Hariharasudhan
9 November 2024, 10:30 am

சென்னையில் ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலை அடுத்து, நேற்றைய முன்தினம் சட்டென கிராமுக்கு 150 ரூபாய்க்கு மேல் குறைந்தது. ஆனால் நேற்று மீண்டும் 50 ரூபாய்க்கு மேல் அதிகரித்தது. இதனால் பருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாம் என்பது போல தங்கம் விலை அமைந்தது.

Silver coin

இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதன்படி, இன்று (நவ.9) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 275 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ஆரோக்கியமான வழியில் வெயிட் கெயின் பண்ண ஆசையா… அப்போ நீங்க சாப்பிட வேண்டியது இது தான்!!!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 780 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றமில்லாமல் ஒரு கிராம் 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Good Bad Ugly Full Movie Leaked on Net in HD Print இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!