நடிகை மீனா கைது… போதையில் போலீசிடம் கையும் களவுமாக சிக்கியதால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
9 November 2024, 4:08 pm

நடிகை மீனா கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க தமிழக அரசு, காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், போதைப் பொருளை கட்டுப்படுத்த முடியவில்லை.

பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படியுங்க: 4 பெஸ்டி போதுமா.. கொஞ்சம் குத்து விளக்கு தான்.. இவரா ‘அவர்’

இந்த நிலையில் டெடி படத்தில் நடித்த துணை நடிகை மீனா சென்னையில் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை விற்பனை செய்த போது கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

நடிகை மீனா சுந்தரி நாடகத்தில் நடித்துள்ளவர். தற்போது இவர் கைது செய்யப்பட்டிருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இவர் யாருக்கெல்லாம் விற்பனை செய்தார்? சினிமாத் துறையில் போதைபொருள் விற்பனை செய்யப்பட்டதா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தொடர் விசாரணையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

  • Naga Chaitanya Sobhita Marriage களைகட்டிய நாக சைதன்யா-சோபிதா திருமணம்..சமந்தா போட்ட திடீர் பதிவு.!
  • Views: - 498

    1

    0